When You See a Hair in Dream in Tamil
நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலன்களை தரும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் முடியை கனவில் கண்டால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம். நமக்கு வரும் சில கனவுகளில் ஒரு சில கனவுகள் நமக்கு நியாபகத்தில் இருக்கும் ஒரு சில கனவுகள் நியாபகத்தில் இருக்காது. அதில் நல்ல கனவுகளும் இருக்கும் கெட்ட கனவுகளும் இருக்கும்.
நல்ல கனவாக இருந்தால் இது பலித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். அதுவே கெட்ட கனவாக இருந்தால் ஐயோ இந்த கனவு பலிக்கவே கூடாது என்று வேண்டிக் கொள்வோம். சில கனவுகள் நமக்கு என்ன பலன்களை தரும் என்பது நமக்கு தெரியாது. அந்த வகையில் நம் கனவில் முடி வந்தால் அது என்ன பலனை தருகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முடி கனவில் வந்தால் என்ன பலன்..?
பொதுவாக முடியை கனவில் கண்டால், செழிப்பான வாழ்க்கை அமையபோவதையும், அறிவுத்திறன் அதிகரிப்பதையும், ஆன்மீகத்தில் அதிர்ஷ்டம் வர இருப்பதையும், உடல் வலிமை பெறப் போவதையும், தன்னுடைய இலக்கு எது என்பதை அறிய இருப்பதையும் குறிக்கும் அறிகுறியாகும்.பெண் பார்ப்பது போல் கனவு கண்டால்..?
முடி கொட்டுவது போல் கனவு கண்டால் – Mudi Kottuvathu Pol Kanavu Vanthal:
முடி கொட்டுவது போல் கனவு கண்டால், மனதில் கவலை வர இருப்பதையும் மற்றும் மன கட்டுப்பாட்டை இழக்க இருப்பதையும் அதனை கட்டுப்படுத்தி மனதை அமைதியாக வைத்திருக்கவும் என்று உணர்த்தும் அறிகுறியாகும்.
நீளமான முடியை கனவில் கண்டால்:
நீளமான முடியை கனவில் கண்டால், வருமானத்தில் உயர்வு ஏற்படபோவதையும் வியாபாரத்தில் வெற்றி கிடைப்பதையும் குறிக்கும் அறிகுறியாகும்.
மேலும் நீண்ட முடியை பிறருக்கு தெரியாமல் மறைப்பதை போல் கனவு கண்டால் அவர் ஏதோ ஒரு விஷயத்தை பிறரிடம் மறைக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
அதுமட்டுமில்லாமல், தனது நீண்ட முடியை பிறருக்கு பெருமையாக காண்பிப்பது போல் கனவு கண்டால், தனது திறமைகளை மற்றவர்களிடம் மிகைப்படுத்தி காட்ட இருப்பதையும் குறிக்கிறது.
முடியை வெட்டுவது போல் கனவு கண்டால்:
முன்புறத்தில் உள்ள தலைமுடியை வெட்டுவது போல் கனவு கண்டால், வாழ்க்கையில் ஏதோ ஒரு புதிய மாற்றம் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
தனது முடியை தனக்கு பிடிக்காமல் வலுக்கட்டாயமாக வெட்டுவது போல் கனவு கண்டால், ஏதோவொரு தப்பினை செய்து விட்டு குற்ற உணர்ச்சியுடன் பயந்து இருப்பதை குறிக்கிறது.
தனது முடியை, தானே வெட்டி கொள்வது போல் கனவு கண்டால், அவர் தனது பழைய பழக்கவழக்கங்களை விட்டு விடவும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இருந்து விலகி விடவும், கடந்த கால எண்ணங்களை மறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா..?
குட்டையான முடியை கனவில் கண்டால்:
குட்டையான முடி தலையில் இருப்பதை போல் கனவு கண்டால், தொழிலில் நஷ்டம் ஏற்பட போவதையும் சிறிது காலம் நஷ்டம் ஏற்பட்டு பிறகு வருமானம் உயரும் என்பதை குறிக்கிறது.
நரைமுடியை கனவில் கண்டால்:
நரைமுடியை கனவில் கண்டால் நல்ல ஞானம் பெற இருப்பதையும், நீண்ட ஆயுள் பெறப் போவதையும், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வதையும், செய்யவிருக்கும் செயல்கள் அனைத்தும் சாதகமாக முடியும் என்பதையும் குறிக்கிறது.
வளரவே வளராதுன்னு நெனச்ச முடியை கூட அடர்த்தியாக வளர வைக்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |