Dead Person Photo Direction as Per Vastu
நம்மில் பலபேருக்கும் வீட்டில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வழிபடலாமா.? என்ற குழப்பம் இருக்கும். இன்னும் சிலர்க்கு, இறந்தவர்களின் ஃபோட்டோவை வீட்டில் எந்த இடத்தில் மற்றும் எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும்.? அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நம் வீட்டில் வாழ்ந்து இறந்தவர்களின் புகைப்படத்தை நம் வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. அதேசமயம், இறந்தவர்களின் புகைப்படத்தை எந்த இடத்தில் எந்த திசையில் வைத்து வழிபடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். எனவே, இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த இடத்தில் வைத்து வழிபட்டால் நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மறந்தும் மாட்டிடாதீங்க
Where Should Hang Dead Person Photo in Home in Tamil:
பெரும்பாலான வீடுகளில் இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். இது மிகவும் தவறான செயல். என்னதான், இறந்தவர்களை நாம் கடவுளுக்கு இணையானவர்கள் என கூறினாலும், அவர்கள் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ சில பாவங்கள் செய்து இருப்பார்கள். எனவே, இறந்தவர்களின் புகைப்படத்தை கடவுளுக்கு இணையாக பூஜை அறையில் வைத்து வழிபடுதல் கூடாது.
ஆகையால், வீட்டின் பூஜை அறை மற்றும் படுக்கை அறை என இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து மற்ற இடங்களில் இறந்தவர்களின் ஃபோட்டோவை வைத்து வழிபடலாம். அதேபோல், இறந்தவர்களின் புகைப்படத்தை வடக்கில் மாட்டி தெற்கு பார்த்து இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது.
அதுமட்டுமில்லாமல், கடவுளுக்கு பயன்படுத்திய விளக்கை கொண்டு , இறந்தவர்களின் போட்டோவிற்கு விளக்கேற்ற கூடாது. அதற்கென்று தனி விளக்கு வாங்கி வந்து விளக்கேற்ற வேண்டும்.
இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைக்கலாமா.?
இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், வீட்டில் பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது.
எனவே, கடவுளுக்கு இணையாக, இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து இருந்தால் அதனை உடனே எடுத்து வேறு இடத்தில் வைத்து விடுங்கள்.
வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாது தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |