வீட்டில் பணம் மழை பொழிய இந்த இடத்தில் பணத்தை வைத்து பாருங்கள்..!

where to keep money according to vastu in tamil

பணப்பெட்டி வைக்கும் திசை

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! நீங்கள் மாதம் மாதம் சம்பளம் பணத்தை வீட்டில் கொடுத்தாலும் அந்த பணம் அப்படியே இருக்கா..! பணம் பெருக மாட்டிகிறதா..? அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா..! நீங்கள் பணத்தை பீரோவில் வைப்பீர்கள். ஆனால் அந்த பணத்தை வாஸ்து படி வைத்துள்ளீர்களா..! பணத்தையும் வாஸ்து படி வைக்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியமானது. பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த பணத்தை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

பணப்பெட்டி வடக்கு திசை:

வடக்கு திசையில் செல்வம் குடியிருக்கும். செல்வங்களை அதிகரிக்க செய்யும் குபேர கடவுளின் திசையாக கருதப்படுகிறது. அதனால் பணம் மற்றும் நகைகளை வடக்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் வைப்பதால் பணத்தை பெருக செய்யும். வீட்டில் அதிர்ஷ்டத்தையும் உண்டாக்கும்.

பணப்பெட்டி கிழக்கு திசை:

கடையில் பண பெட்டியை கிழக்கு திசையில் வைப்பது நல்லது. பண பெட்டியின் கதவு வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். தெற்கு திசையில் பண பெட்டியை வைக்காதீர்கள். இந்த திசை பணத்தை வைத்தால் பணம் பெருகாது.

பணப்பெட்டி வைக்கும் இடம்:

வாஸ்து படி பணத்தை பெட்ரூம் அல்லது வீட்டில் இருக்கும் அலமாரிகளில் வைப்பது சிறந்தது. பூஜை அறையில் மறந்தும் கூட பணத்தை வைக்காதீர்கள்.

பணப்பெட்டி வைக்கும் முறை:

பணம் வைக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு மற்றும் தூசி இல்லாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் பணம் எதில் வைக்கிறீர்களோ அதில் ஒரு வெள்ளி காசை வையுங்கள். இப்படி வைப்பதினால் பணத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பணம் வைக்கும் இடத்தில் பணம் மற்றும் காசு தான் வைக்க வேண்டும். போட்டோ மற்றும் பேப்பர் போன்ற ஆவணங்கள் எதும் வைக்க கூடாது.

பணம் வைக்கும் இடத்தில் பணம் இல்லாமல் காலியாக இருக்க கூடாது. பணமே இல்லை என்றாலும் 1  ரூபாயாவது வையுங்கள்.

நீங்கள் பீரோ இல்லை அலமாரி போன்ற இடங்களில் பணத்தை வைக்கிறீர்கள் என்றால் முதல் அடுக்கு மற்றும் கடைசி அடுக்கில் பணத்தை வைக்காதீர்கள். இந்த மாதிரி வைத்துள்ளீர்கள் என்றால் மாற்றி வையுங்கள்.

ஜன்னல் இருக்கும் இடத்தில் பணத்தை வைக்காதீர்கள். இப்படி வைப்பதினால் பணம் வீட்டை விட்டு வெளியேறுமாம்.

மேல் கூறப்பட்டுள்ள போல் பணத்தை வையுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் பணம் மழை பொழியும்.

தொடர்புடைய பதிவுகள் ⇓

உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம் இருக்கும் இடத்தில் வையுங்கள்

வீட்டில் பணம், காசு புழங்க இதை மட்டும் செய்து பாருங்கள்..!

வீட்டில் பணம் மழை பொழிய வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்ங்க..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்