இந்த கிழமையில் மட்டும் நகம் வெட்டாதீங்க…!

Advertisement

நகம் வெட்ட கூடாத நாட்கள்

பெரும்பாலும் பெண்களுக்கு நகம் வளர்ப்பது பிடிக்கும். ஆனால் நகத்தினை வளர்ப்பது தவறு இல்லை. நகத்தினை எந்த கிழமையில் வெட்டுவது என்பதை பார்த்து விட்டு வெட்டுவது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் கிரகத்துடன் தொடர்புடையது. அதனால் நாம் ஒரு செயலை செய்ய போகிறோம் என்றால் நாள் மற்றும் கிழமை பார்ப்பது அவசியமாகும். அதிலும் குறிப்பாக நகம் வெட்டுதல், முடியை வெட்டுவது, அசைவ உணவுகளை சாப்பிடுவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய பதிவில் எந்தெந்த கிழமையில் நகம் வெட்ட கூடாது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நகம் வெட்ட கூடாத கிழமைகள்: 

நகம் வெட்ட கூடாத நாட்கள்

சனிக்கிழமை :

பொதுவாக ஆன்மிகத்தின் படி சனிக்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமையில் நகம் வெட்டுவதனால் ஒருவரது ஆயுளை குறைத்து விடும் என ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் வறுமை அதிகரிக்கும்.

நகம் கடிப்பதற்கான காரணம் என்ன? அந்த பழக்கத்தை கைவிடுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

செவ்வாய் கிழமை : 

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிழமையில் நகம் வெட்டினால் அவர்களின் சகோதரி அல்லது சகோதரர் விட்டு பிரியும் நிலை எற்படும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறார்கள். அதிலும் அவர்களின் தைரியம் மற்றும் வீரம் குறைய வாய்ப்பு உண்டு என கூறுகிறார்கள். இதை தவிர நகங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்.

வியாழக்கிழமை:

ஜோதிட சாஸ்திரத்தின் படி வியாழ கிழமையில் நகத்தினை கடித்தால் அவர்களின் கல்வி மற்றும் அறிவாற்றல் போன்றவை குறைத்து விடும். அதுமட்டுமில்லாமல் வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வியாழக்கிழமை அன்று நகத்தை வெட்டினால் வீட்டில் உள்ள செல்வா செழிப்பு குறைந்து விடும்.

எந்த நேரத்தில் வெட்ட கூடாது:

அதுபோல மாலை அல்லது இரவு நேரத்தில் நகத்தினை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் பெருகி விடும். பொதுவாக லட்சுமி தேவி மாலை மற்றும் இரவு வேலையில் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். அந்த நேரத்தில் நகம் வெட்டுவதனால் லட்சுமி தேவி கோபம் அடைத்து வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என கூறுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் வறுமை நிலைமை ஏற்படும் என கூறுகிறார்கள்.

நகம் வெட்டும் நாட்கள் : 

புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நகம் வெட்டுவதற்கு உகந்த நாளாக இருக்கிறது. இதனை மாலை 4.45 மணிக்குள் வெட்ட வேண்டும்.

இரவில் நகம் வெட்டலாமா : 

இரவு நேரத்தில் நகத்தை வெட்டும் போது கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தான் இரவு நேரத்தில் நகத்தை வெட்ட கூடாது.

அமாவாசை தினத்தில் நகம் வெட்டலாமா : 

அமாவாசை அன்று பித்ருக்களுக்கு காரியம் செய்பவர்கள் நகத்தை வெட்ட கூடாது. மற்றவர்கள் அன்றைய தினத்தில் நகத்தை வெட்டலாம்.

நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement