எந்த கிழமையில் எந்த கலர் ட்ரெஸ் அணிய வேண்டும்..

Advertisement

எந்த கிழமையில் எந்த கலர் டிரஸ் அணிந்தால் வெற்றி 

பொதுவாக ஆடை என்பது நமது விருப்பத்தின் படி தான் இருக்கும். ஒரு கடைக்கு சென்றால் கூட நமக்கு எந்த நிற ஆடை பிடித்திருக்கிறதோ அந்த ட்ரஸை தான் எடுப்போம். நாம் அணிந்திருக்கும் ஆடையை பொறுத்து தான் நமக்கு தைரியம் மற்றும் ஆளுமை திறன் போன்றவை காணப்படும்.  அது போல நம்முடைய நிறம் மற்றும் அளவுக்கு ஏற்றது போல் தான் ஆடைகளை தேர்வு செய்வோம்.

அது போல சில பேருக்கு செண்டிமெண்ட் ட்ரெஸ் என்று இருக்கும், அந்த ட்ரஸை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். லக்கி ட்ரெஸ் என்று இருக்கும். இந்த லக்கி ட்ரசை நாம் பரீட்சை அல்லது Interview-க்கு செல்லும் போது அந்த ட்ரஸை தான் அணிந்து செல்லுவோம். ஏனென்றால் அந்த ஆடையை அணிந்து செல்லும் போது நமக்கு வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இந்தத்த கிழமைகளில் இந்த நிற ஆடைகளை அணிந்தால் வெற்றி கிடைக்குமாம். அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

Which Day Which Colour Dress We Wear in Tamil

கிழமை  நிறங்கள் 
ஞாயிறு ஆரஞ்சு
திங்கள் வெள்ளையில் சிவப்பு
செவ்வாய் சிவப்பு
வியாழன் மஞ்சள்
வெள்ளி வெள்ளையில் நீலம்
சனி கருநீலம் அல்லது கருப்பு

நாட்களும் பயன்படுத்தக்கூடாத உடையின் நிறங்களும்..!

எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்:

  • ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வணங்கலாம். இவருக்கு விரதம் இருந்து, அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் மிகுந்த பலனை கொடுக்கும்.
  • திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாக இருக்கிறது, அதனால் இந்த நாளில் பால் மற்றும் சர்க்கரை, அரிசி போன்றவற்றை வைத்து வணங்க வேண்டும்.
  • செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக இருக்கிறது, அதனால் இந்த நாளில் ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
  • புதன்கிழமை கிருஷ்ணருக்கு உகந்த நாளாக இருக்கிறது, அதனால் இந்நாளில் இவருக்கு துளசியை வைத்து வழிபட வேண்டும்.
  • வியாழக்கிழமை குருவிற்கு உகந்ததாக இருக்கிறது. இந்த நாளில் கொண்டக்கடலை அவித்து குருவிற்கு வழிபட்டால் உங்களின் வாழ்க்கையில் சீரும் சிறப்புமுமாக இருப்பீர்கள்.
  • வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உரிய நாளாக இருக்கிறது, இந்த நாளில் இவரை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.
  • சனிக்கிழமை ஆஞ்சேநேயருக்கும் உரிய நாளாக இருக்கிறது, ஆகையால் இந்நாளில் விரதம் இருந்து இவரை வழிபடுவதன் மூலம் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement