தூங்கும்போது இந்த திசையில் தலைவைத்து தூங்காதீர்கள்.. வீட்டில் பணக்கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்..!

Advertisement

In Which Direction We Should Not Sleep in Tamil

பொதுவாகவே நாம் சில செயல்களை தவறாக செய்தால் நமக்கு ஏதோவொரு பிரச்சனை உண்டாகும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்லி சென்ற சில விஷயங்களை நாம் தவறாக கடைபிடிக்கிறோம். இதனால் சில பிரச்சனைகள் வரும் என்பது நமக்கு தெரியாது. அதேபோல், நாம் தூங்கும் போது குறிப்பிட்ட திசையில் தலைவைத்து தூங்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை ஆன்மிகத்தில், இ

த்திசையில் தூங்கினால் பணக்கஷ்டம் ஏற்படும் என்றும், ஆயுள் குறையும் என்று கூறுகிறார்கள். ஓகே வாருங்கள் எந்த திசையில் தலைவைத்து தூங்கக்கூடாது..? அவ்வாறு தூங்கினால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Which Side We Should Not Sleep in Tamil:

நாம் பொதுவாக கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு போன்ற திசைகளில் தலைவைத்து தூங்குவோம். இத்திசையில் எந்த திசையில் தலைவைத்து தூங்க வேண்டும் என்று நமக்கு தெரியாது.

வீடு கட்டும்போதும், வாங்கும்போது நாம் எப்படி வாஸ்து பார்த்து வாங்குகிறோமோ அதேபோல், தூங்கும்போது வாஸ்து பார்த்து தான் தூங்க வேண்டும். அப்படி தூங்கினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இரவு தூங்கும்போது 2 மணிக்கு முழிப்பு வருகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

 

எந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது..?

 வடக்கு திசையில் தலைவைத்து தூங்குவது தவறு. ஏனென்றால்  பிணங்களை வடக்கில் தலைவைத்து தான் அடக்கம் செய்வார்களாம். அதுமட்டுமில்லாமல் வீட்டில் பணக்கஷ்டம், ஆரோக்கிய பிரச்சனை போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வடக்கில் தலைவைத்து தூங்கக்கூடாது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வடக்கு திசையில் தலைவைத்து தூங்கக்கூடாது என்பதற்கு ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது.   பூமியின் வடக்கு திசையில் நேர்மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் இருக்கிறது. எனவே நாம் வடக்கில் தலைவைத்து தூங்கும்போது, நேர்மின்னூட்டம் தலையிலும், எதிர் மின்னூட்டம் காலிலும் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட்டு ஆயுள் குறையும் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. 
ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

கிழக்கு திசையில் தலைவைத்து தூங்கினால் நல்லதா..?

கிழக்கு திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது. ஏனென்றால், கிழக்கு திசையில் இருந்து வருகின்ற ஆற்றல் நமக்கு எல்லா விதமான நேர்மறை ஆற்றலையும் தருகிறது. எனவே கிழக்கு திசை நல்லது.

மேற்கு திசையில் தலைவைத்து தூங்கினால் நல்லதா..?

மேற்கு திசையில் தலைவைத்து தூங்கினால் பேரும் புகழும் பெற்று செழிப்போடு வாழலாம். மேலும் பணக்காரர் ஆகுவதற்கான வாய்ப்பும் கிட்டும்.

தெற்கு திசையில் தலைவைத்து தூங்கினால் நல்லதா..?

இத்திசையில் தலைவைத்து தூங்கினால் வசதி, செல்வம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும். எல்லாத்திசைகளை விடவும் தெற்கு திசையில் தலைவைத்து தூங்குவது தான் சிறந்தது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement