வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள்..!

Advertisement

 Which God Photos Should Not be Kept at Home

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இந்த ஆன்மீக பதிவில் சாஸ்திரத்தின்படி வீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் எவை என்று பார்க்கலாம். பொதுவாக ஆன்மீகத்தில் பல சம்ரதாயங்கள்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நம்மால் அறிந்திருக்க முடியும். இன்னும் இக்காலத்தில் உள்ள ஒரு சிலருக்கு ஆன்மீக சாஸ்திரங்கள் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக சாஸ்திரத்தின்படி வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம் வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனை இல்லாமலும் நோய் நொடியில்லாமலும் வாழ்வதற்கு கடவுளின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். அதனால் தான் கடவுளின் மீது தீராத பக்தி கொண்டு வீட்டின் பூஜை அறையில் பல்வேறு விதமான சாமி படங்களை வைத்து வழிபடுகிறோம். ஆனால், பூஜை அறையில் வைக்க கூடிய சாமி படங்களுக்கென்று சில சாஸ்திரங்கள் உள்ளது. அதனை பற்றி விவரமாக பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாது தெரியுமா..?

வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள்:

வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள்

  • சனீஸ்வரன் பகவானின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது.
  • கோபமாக ருக்கும் காளியின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது.
  • நடராஜனின் உருவப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது.
  • முருகப்பெருமான் மொட்டை அடித்த படம், கோவணம் கட்டிய படம் மற்றும் தலைக்கு மேல் வேல் வைத்திருக்கும் முருகன் படங்களை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
  • ஐயப்பன் சுவாமி படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
  • ஆஞ்சநேயர் சாமி படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.
  • ருத்ர தாண்டவ நிலையிலும் கொடூர பார்வை மற்றும்  தலைவிரி கோலத்திலும் உள்ள அம்பிகை படங்களை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
  • இறந்தவர்களின் உருவ படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது.
  • நவ கிரங்கங்களின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடகக்கூடாது.
  • கருப்பண்ண சாமி படங்களை வீட்டின் பூஜை அறையில் வைப்பது அவ்வளவு நல்லதல்ல.
  • மேலும், உடைந்த மற்றும் கிழிந்த நிலையில் இருக்கும் சாமி படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

சாமி படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்.?

பூஜை அறையில் சாமி படத்தை மேற்கு திசையில் வைத்து கிழக்கு நோக்கி பார்க்குமாறு வைக்க வேண்டும். கடவுளை வணங்கும்போது தெற்கு திசையில் நின்று வடக்கு பார்த்தவாறு வணங்குவது நல்லது.

இறந்தவர்களின் ஃபோட்டோவை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்..? என்று உங்களுக்கு தெரியமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement