வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள்..!

which god photos to keep in pooja room

பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள்..! which god photos to keep in pooja room..!

which god photos to keep in pooja room:- பொதுவாக அனைவரது வீட்டிலும் பூஜை அறை கட்டாயமாக இருக்கும். ஒருவர் வீட்டில் பூஜை அறை இல்லையென்றாலும் கடவுளுக்கு என்று சிறிய இடமாவது ஒதுக்கி வழிபடுவார்கள். இந்த பூஜை அறையினை மிகவும் சுத்தமாகவும், நறுமணம் நிறைந்ததாகவும் வைத்திருப்போம். இத்தகைய பூஜை அறையில் நாம் எந்த சாமி படங்களை வைத்து வழிபட வேண்டும்..? எந்த சாமி படங்களை வைத்து வழிபடக்கூடாது..? என்று இப்பொழுது உள்ளவர்களுக்கு தெரிவதில்லை.

சரி இந்த பதிவில் வீட்டில் பூஜை அறையில் எந்த தெய்வத்தின் உருவத்தை படமாக வைத்து வழிபட வேண்டும்? எந்த தெய்வத்தின் உருவ படங்களை வைத்து வழிபடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!

வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள்..!

வீட்டில் கட்டாயம் வைத்து வழிபட வேண்டிய சாமி படங்கள் என்னவென்றால் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள் மற்றும் முருகன் இந்த ஐந்து தெய்வங்களின் புகை படங்களை பூஜை அறையில் வைத்து கட்டாயமாக வழிபட வேண்டும்.

தங்களுடைய இஷ்ட தெய்வங்களின் படங்களையோ அல்லது சிறிய அளவிலான சிலைகளையோ பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அதாவது சிவன், அம்மன் என தங்களுக்கு பிடித்த தெய்வங்களின் உருவ படங்களை வைத்து வழிபடலாம்.

அதேபோல் ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் போன்ற தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் பிரம்மசாரி அதனால் அந்த தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். அது தவறாகும் தங்கள் வீட்டில் தனியாக பூஜை அறை இருக்கிறது என்றால் இந்த தெய்வங்களின் உருவ படங்களை வைத்து வழிபடலாம்.

வீட்டில் பூஜை அறையில் நடராஜரின் சிலையை வைத்து வழிபடலாம் இருப்பினும் அந்த சிலையினை தெற்கு திசையில் வைத்து தான் வழிபட வேண்டும்.

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

 

காளி, மகிஷாசுரமர்த்தினி, சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா தேவி, நரசிம்மமூர்த்தி போன்ற தெய்வங்களின் உருவ படங்களையும் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். இருப்பினும் இந்த தேனுவங்களுக்கு ஏற்ற பூஜைகள் மற்றும் ஆராதனைகளை பின்பற்ற வேண்டும்.

இந்த தெய்வங்களை எல்லாம் விட தங்கள் குலதெய்வங்கள் படங்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாது சாமி படங்கள்..!

உடைந்த சாமி படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது.

சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து வழிபட கூடாது.

அதேபோல் ஒன்பது நவகிரகங்களின் படங்களை வைத்து வழிபடக்கூடாது.

முன்னோர்களின் திருஉருவ படங்களை பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது.

பூஜை அறை டிப்ஸ்:-

பூஜை அறையினை யபொழுது சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதாவது பூஜை அறையில் காய்ந்த அல்லது அழுகிய புகளையோ அல்லது பழங்களையோ வைக்க கூடாது.

அதேபோல் மஞ்சள், குங்குமம் மற்றும் விபூதியை பூஜை அறையில் மூட்டை மூட்டையாக வைக்க கூடாது. அதனை வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும்.

பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை:-

தெய்வங்களின் உருவ படங்களை பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.

கணபதி ஹோமம் பலன்கள்..!

 

 

இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>ஆன்மீக தகவல்கள்