தங்க மோதிரம் யார் அணியலாம்
இந்தியாவில் தங்கம் மஹாலட்சுமியின் மறுஉருவமாக பார்க்கப்படுகிறது. கஷ்ட காலத்தில் தங்கத்தை பணமாகவும் மாற்றி கொள்ளலாம். ஆன்மிகத்தில் எந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் என்றும், யாரெல்லாம் தங்கத்தை அணிய கூடாது என்றும் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தங்கம் அணிந்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்:
நீங்கள் என்ன மோதிரம் அணிந்திருக்கிறீர்கள்.! உங்களை பற்றி சொல்கிறேன்
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தங்கம் அணிவதால் வியாழன் கிரகம் வலுவாக இருக்கும். குருவை தங்கத்தின் காரணியாக பார்ப்பதால் பணப்பிரச்சனை ஏதும் இருந்தால் அவை நீங்கி, பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் தங்க மோதிரம் அணிந்தால் நீங்கள் ஆசைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும். தங்க மோதிர அணியவில்லை என்றாலும் செயின் அல்லது வளையலாகவும் அணியலாம். கன்னி ராசியில் வியாழன் ஏழு மற்றும் ஐந்தாம் வீட்டில் அதிபதியாக இருப்பதால் தங்க நகைகள் அணிவதால் உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் தங்கம் அணிவதால் சுறுசுறுப்பாக இருந்து அனைத்து வேலைகளையும் ஈசியாக முடித்து காட்டுவீர்கள்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் தங்கம் அணிவதால் தைரியமாக இருப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மேலும் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். குடும்பத்தில் பெற்றோர்கள் மற்றும் துணை இருவருமே பக்க பலமாக இருப்பார்கள். தங்க மோதிரம் அணிவதால் பழைய கடன்கள் நீங்கி நிதிநிலைமை அதிகரிக்கும்.
எந்த விரலில் மோதிரம் அணிந்தால் என்ன பலன்கள் வாங்க பார்க்கலாம்
யாரெல்லாம் தங்க மோதிரம் அணிய கூடாது:
தங்க நகைகளை ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் தங்கத்தை அணிய கூடாது. அதே போல் துலாம் மற்றும் மகரம் குறைந்த அளவிலான தங்கத்தை அணியலாம். இரும்பு அல்லது நிலக்கரி சார்ந்த இடத்தில் வேலை செய்தால் தங்க நகைகளை அணிய கூடாது. ஏனென்றால் தங்கம் சனி பகவானுக்கு தொடர்புடையதால் தங்கத்தை அணிந்திருந்தால் தொழிலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதான பெண்கள் தங்க நகைகளை அணிய கூடாது. தூங்கும் போது தங்க நகைகளை அணிந்து தலைக்கு கீழ் வைத்து தூங்க கூடாது.
தங்கத்தை எந்த விரலில் அணிய வேண்டும்:
தங்கத்தை வலது கையில் தான் அணிய வேண்டும். இடது கையில் அணிய கூடாது. அதே போல் இடுப்பு பகுதியிலுருந்து கால் பகுதி வரைக்கும் தங்கத்தை அணிய கூடாது. ஏனென்றால் இந்த பகுதிகளில் தங்கத்தை அணிந்தால் உடலில் நோய்கள் ஏற்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |