Which the Like Zodiac for Krishna
ஆன்மீகத்தை பொறுத்தவரை எண்ணற்ற கடவுள்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது நம்பிக்கை மற்றும் வழிபடும் முறை என்பது காணப்படும். அந்த வகையில் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தினையும் அந்த கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து செய்து வருவோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எப்படி மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது ஆசை மற்றும் நம்பிக்கை இருக்கும். ஆனால் இதனை போலவே ஆன்மீகத்தில் கடவுள்களுக்கு பிடித்தமான ராசிகள் என்று சில உள்ளது. அந்த வகையில் இன்று கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் எது என்று தான் இன்றைய ஆன்மீக பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
கிருஷ்ண பகவானுக்கு பிடித்தமான ராசிகள்:
நம்மில் நிறைய நபர்கள் கிருஷ்ண பகவானை வழிபட்டு கொண்டிருப்போம். அதிலும் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும், நினைத்த காரியம் விரைவில் கைக்கூட வேண்டும் என்றும் வழிபட்டு வருவோம்.
ஆனால் இத்தகைய பலன்கள் அனைத்தும் கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதனால் எந்த ராசிகள் எல்லாம்கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்தவை என்று விரிவாக கீழே பார்க்கலாம் வாருங்கள்.
கடக ராசி:
12 ராசிகளில் கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் கடக ராசியும் ஒன்றாக உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு செய்யும் அனைத்து விதமான செயல்களும் நன்மையினை அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையினையும் மிகவும் எளிமையாக கையாள்வார்கள்.
துலாம் ராசி:
துலாம் ராசி ஆனது கிருஷ்ண பகவானுக்கும் பிடித்த ராசியாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. அதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல பெயரினை பெற்று வாழும் குணம் கொண்டவராக காணப்படுவார்கள்.
அதுமட்டும் இல்லாமல் கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தால் துலாம் ராசிக்காரர்கள் செய்யும் வேலை மற்றும் கல்வியில் நன்கு வல்லமை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழுவார்கள்.
ரிஷப ராசி:
கிருஷ்ண பகவானின் முழு ஆதரவும் ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்டு. ஏனென்றால் ரிஷப ராசி ஆனது கிருஷ்ண பகவானின் விருப்பமான ராசிகளில் ஒன்றாக உள்ளது. அதனால் செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் மற்றும் லாபம் உண்டாகும்.
மேலும் இறைவனின் மீது அதிகமான நம்பிக்கை வைத்து இருப்பதால் உங்களுடைய வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியானதாகவும், பொருளாதார நிலை மேம்பட்டும் காணப்படும்.
சிம்ம ராசி:
கிருஷ்ண பகவானுக்கு பிடித்த ராசிகளில் கடைசியாக நாம் தெரிந்துக்கொள்ள போவது சிம்ம ராசி தான். சிம்ம ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தால் கடின உழைப்பிற்கான வெற்றியினை பெரும் அதிர்ஷ்டம் நிறையவே உள்ளது.
அதேபோல் எந்த செயலை செய்தாலும் அதனை முழுமையாக செய்து முடிக்கும் குணம் படைத்தவர்கள். மேலும் இவர்கள் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளும் தன்மை இல்லாதவராக இருப்பதால் வெற்றியினை நோக்கி மட்டுமே செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே இவர்களுக்கு முழு ஆதரவையும் அளிக்கும் விதமாக தான் கிருஷ்ண பகவானின் பலன்களை அளிக்கிறார்.
மகாலட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமான ராசிக்காரர்கள் இவர்கள் தான்..உங்க ராசி இருக்கா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |