Vakra Sani Effects in Tamil
ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் இருக்கிறது. இத்தகைய ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் யாவும் அனைத்து நபர்களுக்கும் ஒரே மாதிரியாகவோ அல்லது ஒரே பலன்களையோ அளிக்கவில்லை. ஏனென்றால் ஒரு மனிதனின் பிறந்த தேதி மற்றும் நேரம் இவற்றை எல்லாம் வைத்து தான் ராசி மற்றும் நட்சத்திரம் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்தும் முக்கியமானதாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. இவ்வாறு நிகழும் பெயர்ச்சியில் சிலருக்கு நன்மைகளும், சிலருக்கு தீமைகளும் கிடைக்கிறது. அந்த வகையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக ஆன்மீகத்தின் படி கொஞ்சம் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் யாரென்று தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சனி பகவான் வக்ர பெயர்ச்சி 2023:இந்த வருடத்திற்கான சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். அதே சமயம் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை சனி பகவான் கும்ப ராசியிலேயே வக்ர நிலையினை அடைகிறார்கள். சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் யார் யார்..?
கும்ப ராசி:
ராசியில் 11-வது ராசியாகவும் கும்பம் போன்ற அமைப்பினை கொண்டதாகவும் இருப்பது கும்ப ராசி தான். இத்தகைய கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பெயர்ச்சி அடைந்தாலும் கூட அதே ராசியில் வக்ர நிலையினை அடைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கவில்லை.
அதாவது கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் அடிக்கடி காணப்படும். மேலும் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக எதிர்பாரத்த பலன்கள் எதுவும் கிடைக்காது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
கடகம் ராசி:
கடக ராசிக்காரர்களின் 8-வது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையினை அடைகிறார். இதனால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தேவையற்ற செலவினையும் குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
மேலும் உடல் நலக்குறைபாடு ஏற்பட வாய்ப்பும் உள்ளது என்று ஜோதிடத்தின் படி சொல்லப்படுகிறது.
உங்க ராசிக்கு ஏழரை சனி எப்போது முடிவடையும் |
மேஷ ராசி:
சனியன் வக்ர பெயர்ச்சி ஆனது மேஷ ராசிக்காரர்களுக்கு அந்த அளவிற்க்கு சுமுகமான பலன்களை அளிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் குடும்பத்தில் சூழ்நிலைகள் முன்பு இருந்தது போல் இல்லாமல் சண்டைகள் காணப்படும்.
மேலும் தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு விதமான தடைகளுடன் காணப்படும். எனவே கொஞ்சம் பொறுமை மற்றும் கவனமுடன் மேஷ ராசிக்காரர்கள் இருத்தல் வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தின் பிடி சொல்லப்படுகிறது. ஏனென்றால் சனி வக்ர பெயர்ச்சி நன்மை அளிக்கும் வகையில் காணப்படவில்லை.
அதேபோல் வியாபாரத்தில் நஷ்டமும், அலுவகத்தில் முன்னேற்றமும் இருக்காது. ஆகையால் எந்த செயலையும் செய்வதற்க்கு முன்பாக யோசித்து செய்வதே சிறந்தது.
சனி வக்ர பெயர்ச்சி ஆனது மேலே சொல்லப்பட்டுள்ள ராசிகளில் காணப்படுவதால் பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் கஷ்டத்தையும் தவிர்க்கலாம்.
சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |