Which Zodiac Sign is Lucky in June 2023 in Tamil
ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிரங்களின் நிலையை பொறுத்தே 12 ராசிகளின் ராசிபலன்கள் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது அவற்றின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். எனவே இப்போது ஜீன் மாதத்தில் ஏற்படும் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சியால் கீழே சொல்லப்பட்டுள்ள இந்த 5 ராசிகளுக்கு இக்காலம் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஓகே வாருங்கள் இதில் நம்முடைய ராசி இருக்கிறதா என்று இப்பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
கிரகங்களின் மாற்றத்தால் ஜூன் மாதம் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜீன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை இருந்த நிதி நெருக்கடி இக்காலத்தில் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மிதுன ராசிக்காரர்களின் பதவியும் பெயரும் உயரும்.
துலாம் ராசி:
கிரகங்களின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நிதிநிலைமை இக்காலத்தில் வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் ஜீன் மாதத்தில் வளமாக இருப்பீர்கள். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
மேஷ ராசி:
ஜூன் மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு பணியையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிறரிடம் சிக்கிய பணமோ அல்லது சொத்துகளோ உங்களை வந்து சேரும். எழுத்து, பத்திரிகை மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை தடைப்பட்டு இருந்த வேலைகள் இப்போது முடிவுக்கு வரும். எனவே இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் வளமாக இருப்பீர்கள்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்கள் ஜீன் மாதத்தில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இக்காலத்தில் லாட்டரி அல்லது முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை பெறுவீர்கள். மேலும் இக்காலத்தில் நிதி ஆதாயம் நன்றாக இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை.. குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம்..
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் செய்யும் எல்லா செயல்களும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிலம், வாகனம் போன்றவை வாங்கும் கனவு நினைவாகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |