12 ராசிகளுக்கும் உரிய அட்சய திருதியை பொருட்கள்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அட்சய திருதியை அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருள் வாங்க வேண்டும்.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். அட்சய திருதியை அன்று எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பல மடங்கு பெருகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் பெரும்பாலும் தங்கம் வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களையும் வாங்கி வைப்பார்கள். அதேபோல், 12 ராசிகளும் அவர்களின் ராசிக்குரிய பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்கினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 12 ராசிகளுக்கும் உரிய அட்சய திருதியை பொருட்கள் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?
அட்சய திருதியை அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருள் வாங்க வேண்டும்.?

அட்சய திருதியை அன்று 12 ராசிகளும் அவர்களின் ராசிக்குரிய பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் அவர்களின் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே, 12 ராசிகளும் அட்சய திருதியை அன்று என்ன பொருள் வாங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
| வ.எண் | ராசிகள் | வாங்க வேண்டிய பொருட்கள் |
| 1 | மேஷம் | சிவப்பு பேரீச்சை |
| 2 | ரிஷபம் | தினை அல்லது அரிசி |
| 3 | மிதுனம் | மஞ்சள் |
| 4 | கடகம் | வெள்ளைநிற பொருட்கள் அல்லது வஸ்திரம் |
| 5 | சிம்மம் | செம்பு பாத்திரம் அல்லது பருப்பு வகைகள் |
| 6 | கன்னி | பச்சை வாழைப்பழம் அல்லது பச்சை பயிறு |
| 7 | துலாம் | வெல்லம், கலைப்படைப்புகள் மற்றும் ஆடைகள், |
| 8 | விருச்சிகம் | அரசி மற்றும் சர்க்கரை அல்லது ஆன்மீக புத்தகங்கள் |
| 9 | தனுசு | வெண்டைக்காய் மற்றும் மஞ்சள் நிற பொருட்கள் |
| 10 | மகரம் | செப்பு பாத்திரங்கள் அல்லது கருப்பு நிற ஆடைகள் |
| 11 | கும்பம் | கருப்பு நிற பொருட்கள், கருப்பு எள், கருப்பு நிற ஆடை |
| 12 | மீனம் | புத்தகங்கள் மற்றும் கீரை வகைகள் |
12 ராசிகளும் வழங்க வேண்டிய தானம்:
| ராசிகள் | தானம் வழங்க வேண்டிய பொருட்கள் |
| மேஷம் | தானியங்கள் தானம் செய்ய வேண்டும். |
| ரிஷபம் | பழங்கள் தானம் செய்ய வேண்டும். |
| மிதுனம் | 11 அல்லது 21 பிராமணர்களுக்கு வெள்ளரிக்காயை தானம் செய்ய வேண்டும். |
| கடகம் | புதிய ஆடைகள் அல்லது பழங்கள் |
| சிம்மம் | பிராமணர்கள் அல்லது ஏழைகளுக்கு உணவு தானம் |
| கன்னி | கோவிலில் பழங்கள் அல்லது விசிறி தனம் செய்ய வேண்டும். |
| துலாம் | மாவு, பால் , தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். |
| விருச்சிகம் | பிராமணர்களுக்கு இனிப்பு பொருட்களை தானம் செய்ய வேண்டும். |
| தனுசு | ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்ய வேண்டும். |
| மகரம் | பிராமணர்களுக்கு இனிப்பு பொருட்களை தானம் செய்ய வேண்டும். |
| கும்பம் | கடலை அல்லது சத்தான பொருட்களை தானம் செய்ய வேண்டும். |
| மீனம் | மஞ்சள் நிறத்தில் உள்ள பொருட்களை தானம் செய்ய வேண்டும். |
செல்வம் பெருக அட்சய திருதியை அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












