செப்டம்பர் 7 சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் ஆனது செப்டம்பர் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த கிரகணம் ஆனது இரவு 9.50 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.26 மனைக்கு முடிவடைகிறது. இந்த கிரகணத்தின் தாக்கம் ஆனது 6 மாதங்கள் வரை இருக்க கூடும்.
இந்த கிரகணம் ஆனது கும்ப ராசியில் நிகழவிருக்கிறது. எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்படும். வீட்டில் பல பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் அதில் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் செலவுகள் ஆனது அதிகமாக இருக்கும். குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அதனை கவனமாக செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு சரியான நேரத்திற்கு தூங்குவது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு உங்களின் நம்பிக்கையானவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இடம், சொத்து அல்லது விலையுர்ந்த பொருட்களை வாங்க நினைத்தால் ஒரு முறைக்கு பல முறை விசாரித்து வாங்குங்கள். பதற்ற நிலையில் எந்த வேலையும் செய்யாதீர்கள். படிக்கும் மாணவர்களாக இருந்தால் கல்வியில் தடைகள் ஏற்படலாம். இதிலிருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று விளக்கு ஏற்றுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:
கிரகணம் தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். முக்கியமாக சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் போன்ற நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்வதன் மூலம் கிரகணம் பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ள முடியும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












