வைகாசி மாதத்தில் சூரியனின் அருள் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்..! அதிர்ஷ்ட மழையில் நனைய தயாராகுங்கள்..!

Advertisement

வைகாசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசி எது 

வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் இன்றைய நவீன உலகிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எதை செய்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு ராசிக்கும் கிரக மாற்றம் நடைபெறும். அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது சில ராசிகளுக்கு நன்மையை செய்யும்.

சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். அதுபோல பிரபஞ்சத்தின் தந்தையாக விளங்கும் சூரிய பகவான் மே 15 -ம் தேதி காலை 11.58 மணிக்கு மேஷ ராசியிலிருந்து நகர்ந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் வைகாசி மாதம் முழுவதும் சூரியன் ரிஷப ராசியில் இருப்பார். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

மகர ராசி:

மகர ராசி

மகர ராசியின் 5 ஆம் வீட்டில் சூரியன் நுழைய போகிறார். அதனால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் அன்பான நேரத்தை செலவிடுவீர்கள். இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கடக ராசி:

கடக ராசி

சூரிய பகவான் கடக ராசியின் 11 ஆம் வீட்டில் பிரவேசிக்க போகிறார். அதனால் இந்த நல்ல நேரத்தில் கடக ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் தருணம் இது. அதுபோல நீண்ட நாட்களாக முடியாமல் தடைபட்டிருந்த வேலைகள் இந்த சூழலில் நன்றாக முடிவடையும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. புதிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வர போகுது.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசியின் 9 ஆம் வீட்டில் சூரிய பகவான் நுழைய உள்ளார். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சிம்ம ராசி: 

சிம்ம ராசி

 

சிம்ம ராசியில் பிறந்தவர்களின் 10 ஆம் வீட்டில் சூரியன் நுழைய போகிறார். இந்த நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

சூரிய பகவான் தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் நுழைகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் நேரம் இது. அதிக பணவரவு காணப்படும். மேலும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பொன்னான காலம் இது.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement