ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

Advertisement

ரிஷப ராசியில் சுக்கிரன்

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் மாறாமல் இருப்பது ஆன்மீகம் மட்டும் தான். இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி உண்டாகும். அப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பெயர்சசி உண்டாவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதுபோல ரிஷபத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம் வாங்க..!

இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது

மாளவ்ய ராஜயோகத்தால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..! 

ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாக போகிறது.  அதனால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இங்கு காணலாம் வாங்க.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

ஜோதிட சாஸ்திரத்தின் படி சிம்ம ராசியின் பத்தாவது வீட்டில் மாளவ்ய ராஜ யோகம் உருவாகிறது. அதனால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்து இருக்கும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ராஜயோகத்தால் சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வருடம் சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனி அதிஷ்டம் கொட்ட போகிறதாம்

கும்ப ராசி:

கும்ப ராசி

கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. அதனால் கும்ப ராசியில் பிறந்தவர்களின் வசதிகள் கூடும். நீங்கள் வாகனம் வாங்க இந்த காலம் உகந்த காலமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். மேலும் வீடு, மனை போன்றவற்றை வாங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த காலத்தில் நடக்கும்.

ரிஷப ராசி: 

ரிஷப ராசி

ரிஷப ராசியில் உண்டாகும் மாளவ்ய ராஜயோகம் ரிஷப ராசிக்கே நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கிறது. அதுவும் ரிஷப ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். அதனால் ரிஷப ராசிக்காரர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நடந்து முடியும். எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த ராஜயோகத்தால் உங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாகவே கிடைக்க போகிறது. சுக்கிரனின் சஞ்சாரம் நிதி நிலையை மேம்படுத்த போகிறது.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இத்தல உங்க ராசி இருக்கா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement