ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீட்டில் பணத்தை எடுத்து வைக்க இடமில்லாத அளவிற்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

Which Zodiac Signs Lucky in Rahu Transit in Tamil

Which Zodiac Signs Lucky in Rahu Transit in Tamil

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த நவகிரகங்களின் தாக்கம் என்பது மிகுந்த பங்கு வகிக்கின்றது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அப்படி உள்ள நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் மனிதர்களின் வாழ்க்கையில் நல்லது கெட்டதுகளை நிர்ணயிப்பதில் இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே போல் கேது நம்மை ஆன்மிக வழியில் அழைத்து செல்வார். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் நல்ல நிலையில் இருப்பது என்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் நமது வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும்.

இந்த ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போலவே தங்களின் ராசியை மாற்றி பெயர்ச்சி அடைவார்கள். அதே போல் இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதாவது ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அநேக நல்லது நடக்கும். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படும். இன்றைய பதிவில் இந்த ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் பார்க்கலாம் வாங்க.. 

ஜூன் மாதம் கண்டிப்பாக இந்த 3 ராசிக்கார்களுக்கு திருமணம் கைகூடும் இதுல உங்க ராசி இருக்கானு பாத்து தெரிஞ்சிக்கோங்க

ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள்:

இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடையப்போகிறார். எப்பொழுதும் பின்னோக்கி பெயர்ச்சியாகும் ராகு இந்த ஆண்டு மேஷத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகுகிறார். 

இதனால் 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு காணலாம் வாங்க.

மகரம்:

மகரம்

மகர ராசியின் 3-ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த 3-ஆம் இடமானது தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும். அதனால் இந்த ஆண்டின் ராகு பெயர்ச்சி என்பது மகர ராசிக்காரர்களுக்கு அதீத பலன்களைத் தரப்போகின்றது.

அதாவது இந்த கால கட்டத்தில் உங்களின் மன தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். உங்களின் எதிரிகளை வென்று வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலர் பெரிய பெரிய வெற்றிகள் அல்லது சாதனைகளை படைப்பார்கள்.

மேலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். அதே போல் உங்களின் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிக அளவு கிடைக்கும்.

ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது இதுல உங்க ராசி இருக்கானு பாருங்க

விருச்சிகம்:

விருச்சகம்

இந்த ஆண்டின் ராகு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் அதிகமான சுப பலன்களைத் அள்ளித்தரும். உங்களுக்கு திடீரென பணவரவு அதிகரிக்கும். அதாவது முதலீடு மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த கால கட்டம் அதிக அளவு பயனளிக்கும். மேலும் நீங்கள் செய்யும் தொழில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு. அதனால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

இந்த கால கட்டம் முழுவதும் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு இருந்து கொண்டே தான் இருக்கும். அது போல் 18 ஆண்டுக்கு பிறகு 5-ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி உங்களின் வாழ்க்கையில் சுகம் பெறுவீர்கள்.

கும்பம்:

கும்பம்

அக்டோபர் வரை கும்ப ராசிக்கு ராகு 3-ம் வீட்டில் சஞ்சரிப்பார். அதே போல் சனியும் தனது வீடான கும்பத்தில் மார்ச் 2025 வரை இருப்பார். சனியும் ராகுவும் நட்பு கிரகங்கள் என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் ராகு பெயர்ச்சி மிகுந்த சுப பலன்களையே தரும்.

அதாவது இந்த கால கட்டத்தில் உங்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். அதனால் உங்களின் பொருளாதார நிலை உயரும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பெயர்ச்சி அன்று உருவாகும் அசுப யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி கஷ்டம் தான் அதிகரிக்கும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்