நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் எந்த கடவுள் பிறந்துள்ளார் தெரியுமா.?

Advertisement

Who is The God Born in Your Star in Tamil 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த நட்சத்திரத்தில் எந்த கடவுள் பிறந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் பிறந்த நட்சத்திரத்தில் பலபேர் பிறந்து இருப்பார்கள். அதேபோல், நாம் பிறந்த நட்சத்திரத்தில் ஒரு கடவுளும் பிறந்திருப்பார்.அப்படி உங்கள் நட்சத்திரத்தில் எந்த கடவுள் பிறந்துள்ளார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

12 ராசிகளுக்கு மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது அந்த நட்சத்திரங்களுக்கான அர்த்தம் இதுதான்..!

உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் யார்.?

வ. எண் நட்சத்திரம்  கடவுள் 
1. அசுவினி அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீசரஸ்வதி தேவி
2. பரணி துரியோதனன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.
3. கிருத்திகை கார்த்திகேயன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – முருகப் பெருமான்.
4. ரோகிணி கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீகிருஷ்ணன்.
5. மிருகசீரிடம் புருஷமிருகம் பிறந்ததுள்ளார். அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.
6. திருவாதிரை கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.
7. புனர்பூசம் ராமன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.
8. பூசம் பரதன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
9. ஆயில்யம் தர்மராஜா,லக்ஷ்மணன், சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன்.
10. மகம் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசூரிய பகவான்.
11. பூரம் பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி
12. உத்திரம் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீமகாலட்சுமி தேவி.
13. அஸ்தம் நகுலன் சகாதேவன், மற்றும் லவ குசன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.
14. சித்திரை வில்வ மரம் பிறந்துள்ளது. அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீசக்கரத்தாழ்வார்.
15. சுவாதி நரசிம்மர் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.
16. விசாகம் கணேசர் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீமுருகப் பெருமான். 
17. அனுசம் நந்தனம் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.
18. கேட்டை தர்மன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீவராஹ பெருமாள்.
19. மூலம் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீஆஞ்சநேயர்.
20. பூராடம் பிரகஸ்பதி பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர்.
21. உத்திராடம் சல்யன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீவிநாயகப் பெருமான்.
22. திருவோணம் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீஹயக்கிரீவர்.
23. அவிட்டம் துந்துபி வாத்தியம் பிறந்தது. அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.
24. சதயம் வருணன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .
25. பூரட்டாதி கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீஏகபாதர்.
26. உத்திரட்டாதி ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீமகாஈஸ்வரர்.
27. ரேவதி அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்.

வாழ்க்கையில் முன்னேற 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement