கருப்பு கயிறை எந்த ராசிக்காரர்கள் அணிய கூடாது
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இந்த கண்ணடி மட்டும் நம் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எத்தனை வயதானாலும் இந்த திருஷ்டி மனிதனை மிக சுலபமாக வந்தடைகிறது. இதற்கு வயது வித்தியாசம் என்பது இல்லை. இதன் காரணமாவே நமது முன்னோர்கள் இந்த திருஷ்டியை போக்குவதற்கு சில விஷயங்களை கடைபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் காலில் கருப்பு கயிறு கட்டுவது. ஆனால் இதனை எல்லாரும் கட்டுவதில்லை சிலருக்கு ஒத்துக்காது என்றும் சொல்வர்கள். அது போல ஆன்மிகத்தில் சில ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றை அணிய கூடாதாம். அவை எந்தெந்த ராசிகள் என்றும். எந்தெந்த ராசிகள் கருப்பு கயிற்றை அணியலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
எந்தெந்த ராசிகள் கருப்பு கயிற்றை அணியலாம்:
இன்றைய கால கட்டத்தில் கருப்பு கயிறு கட்டுவது ஸ்டைலாக மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் கருப்பு கயிற்றை கையிலோ அல்லது காலிலோ கட்டி கொள்கிறார்கள். சில பேர் கருப்பு நிறம் ஒத்துக்காது என்று கூறுவார்கள். அவர்கள் எல்லாம் கருப்பு நிறம் பக்கமே போக மாட்டார்கள்.
கருப்பு நிற கயிற்றை மகரம், துலாம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் அணியலாம். கருப்பு கயிறு மட்டுமில்லை கருப்பு நிற ஆடையையும் இந்த ராசியில் பிறந்தவர்கள் அணிந்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
எந்தெந்த ராசிகள் கருப்பு கயிற்றை அணிய கூடாது:
விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தில் உள்ள கயிறோ அல்லது ஆடையையோ பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஆன்மிகத்தில் செவ்வாய் கிரகமானது இரண்டு ராசிகளையும் ஆக்கிரமிக்கிறது. அதனால் இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிறத்தை அணிந்தால் குழப்பமான மன நிலையுடன் காணப்படுவீர்கள். மேலும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு. சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |