Who Was The First Person to Wear Irumudi in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சபரிமலைக்கு இருமுடி சுமந்த முதல் நபர் யார் என்பதை விவரித்துள்ளோம். சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தலையில் இருமுடியை சுமந்துகொண்டு செல்வார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த இருமுடியில் என்ன இருக்கும்.? யார் இந்த இருமுடி காட்டும் பழக்கத்தை கொண்டு வந்தது.? சபரிமலைக்கு யார் முதலில் இருமுடி அணிந்து கொண்டு சென்றார்.? என இப்படி பல கேள்விகளுக்கான பதில் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நம் நினைவிற்கு வருவது ஐயப்பன் சுவாமியும் அவருக்காக கட்டி செல்லும் இருமுடியும் தான். இருமுடி கட்டு சபரிமலைக்கு என்ற பாடலும் உண்டு. இருமுடி ஏன் காட்டுகிறார்கள்.? எதற்காக காட்டுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஓகே வாருங்கள் அதனை படித்து தெரிந்து கொள்ளாலாம்.
சபரிமலைக்கு இருமுடி சுமந்த முதல் நபர்:
பந்தளமகாராஜா ஐயப்பனிடம், “நீ என்னை விட்டு பிரிந்து சபரிமலைக்கு செல்கிறாய்” நான் உன்னை பார்க்க வேண்டுமானால் எப்படிய்யா காட்டு பகுதிகளை கடந்து வருவது.? எனக்கு வயதாகி விட்டது..! உன்னை காண நாம் எப்படி வருவது என்று கேட்டார்.
ஐயப்பனின் கால்கள் ஏன் கட்டப்பட்டிருக்கிறது என்று தெரியுமா.?
அதற்கு ஐயப்பன் சுவாமி, “நீங்கள் என்னை காண வரும் போது பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை கருடன் வழிகாட்டுவார்” என்று கூறினார். அதேபோல், ஐயப்பனை காண கருடன் அவர்களுக்கு வழி காட்டினார். ஒவ்வொரு முறையும், பந்தளமகாராஜன் ஐயப்பனை காண செல்லும்போது, ஐயப்பனின் ஆபரணங்களை எடுத்து சென்று, ஐயப்பனுக்கு போட்டு அழகு பார்ப்பார். அதுமட்டுமில்லாமல், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் அரவனை பாயசம், உன்னி அப்பம் போன்ற உணவு பொருட்களையும் ஐயப்பனுக்கு எடுத்து செல்வார். பந்தள மன்னன் எடுத்துச் சென்ற அரவனை பாயசம், உன்னி அப்பம் இன்றளவும் சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் ஆக கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக தான், ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதி தினத்தன்று, பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி புறப்படும் சமயத்தில் கருடன் வந்து வழிகாட்டும்.
அதுமட்டுமில்லாமல், வயதான நிலையில் இருந்த பந்தள மன்னன் காடுகளில் மலையேறும் போது சிரமப்பட்டு, முடியாமல் ஐயோ… அப்பா.. என கூறி கொண்டே ஏறி வந்ததால் நாளடைவில் அதுவே ஐயப்பா என்று ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சுவாமியே சரணம் ஐயப்பா.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |