தீபாவளி அன்று இந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால் முன் வினை பாவங்கள் நீங்கி, செழிப்பாக வாழ்வீர்கள்..!

why do we take oil bath on deepavali in tamil

தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பது

வணக்கம் நண்பர்களே..! தீபாவளி வருகின்ற திங்கட்கிழமை அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன் என்ன டிரஸ் எடுப்பது, என்ன பலகாரம் செய்வது என்று சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்த பதிவிற்கு செல்லும் முன் அனைவருக்கும் முன்னதமான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..! தீபாவளி ஆண்டு ஆடை அணிவதற்கு முன் எழுந்திருத்ததும் பூஜை அறையில் வைத்திருக்கும் எண்ணெயை வைத்து தலை குளிப்போம். அதற்கு பிறகு தான் பூஜை செய்து விட்டு தான் புது ஆடை அணிவோம்.

தீபவாளி ஏன் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் நரகாசுரன் மறைந்த நாளை தான் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று சொல்லுவோம். ஆனால் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்று ஏன் தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு..

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதன் காரணம்: 

தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பது

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் அவசியாயமானதாகும். அனைவரும் கங்கா நதியில் சென்று குளிக்க முடியாது என்பதற்காக தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கங்கா நதியில் குளிப்பதற்கு சமமாகும். இன்னொன்று எண்ணெய் தேய்த்து விட்டு அதனை தேய்ப்பதற்கு கட்டாயம் சீயக்காய் தான் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் எண்ணெயில் மகா லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான்  தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கான நேரம்:

தீபாவளி அன்று அதாவது சூரியன் உதயத்திற்கு முன் குளித்திட வேண்டும். அதாவது அதிகாலை 03.00 AM முதல் 06.00 AM மணிக்குள் குளித்து முடித்திட வேண்டும். இந்த நேரத்தில் குளிப்பதால் முன்வினை பாவங்கள் நீங்கி விடுமாம். நம் முன் வினை பாவங்கள் நீங்கி வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்க இந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து விடுங்கள்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க காரணம்:

தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பது

தீபாவளி அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அது ஏன்  என்று தெரியுமா.? மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி இறைவனின் அருள் கிடைப்பதற்காக பட்டாசு வெடிக்கப்படுகிறது என்று ஆன்மிக அடிப்படையில் கூறப்படுகிறது.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்