Why is Do Not Count Chapati in Tamil
வீட்டில் டிஃபன் என்றாலே பெரும்பாலும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவை தான் இருக்கும். அதிலும் இட்லி, தோசையை விட சப்பாத்தியை தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே வீட்டில் சப்பாத்தி செய்யும் போது ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று கணக்கில் கொண்டு தான் செய்வோம். அப்படி சப்பாத்தி செய்யும் போது மாவை மட்டுமே அளவாக எடுத்து செய்ய வேண்டும். மாறாக சப்பாத்தி சுடும் போது அதனை எண்ணி செய்ய கூடாது என்று கூறுகிறார்கள். இது நமக்கும் நம் குடும்பத்துக்கும் உடல்நல குறைபாட்டினையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஓகே வாருங்கள், சப்பாத்தி சுடும்போது எண்ணிக்கொண்டு சுடக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
சப்பாத்தி சுடும்போது எண்ணக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள்:
சப்பாத்தி செய்யும் போது இத்தனை பேருக்கு இத்தனை சப்பாத்தி செய்ய வேண்டும் என்று எண்ணி கொண்டு சுடக்கூடாது. இது குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சியையும் அமைதியையும் பாதிக்கும் என்று கூறப்படுகிது. காரணம் என்னவென்றால், சப்பாத்தி செய்ய பயன்படும் கோதுமை தானியம் சூரிய கடவுளுடன் தொடர்புடையவை. எனவே சப்பாத்தி செய்யும் போது எண்ணிக்கொண்டு செய்ய கூடாது. மீறி செய்தால் அது சூரிய கடவுளை அவமதிப்பதாகும். மேலும், உங்கள் ஜாதகத்தில் சூரியனின் பார்வை பலவீனப்படுத்துவதாகும் நம்பப்படுகிறது. எனவே சப்பாத்தி சுடும்போது எண்ணிக்கொண்டு சுட்டால் குடும்பத்தின் மகிழ்ச்சியும் அமைதியும் பாதிக்கப்படும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்..!
தட்டில் மூன்று சப்பாத்திகளை வைத்து சாப்பிடக்கூடாது..?
ஒருவர் இறந்த பிறகு அவருக்கு த்ரயோதசி சடங்கு செய்யப்படுகிறது. அந்த சடங்கில் அவர்களுக்கு 3 சப்பாத்திகளை வைத்து தான் படையலிட்டு மரியாதை செய்வார்களாம்.
எனவே இறந்தவர்களுக்கு 3 சப்பாத்திகள் வைத்து படைக்கப்படுவதால், உயிருடன் இருப்பவர்களுக்கு 3 சப்பாத்தி வைத்து பரிமாற கூடாது என்று இந்து மதத்தில் கூறப்படுகிறது.
மீந்துபோன மாவில் மீண்டும் சப்பாத்தி செய்யக்கூடாது..?
நாம் சப்பாத்தி செய்யும் போது எல்லோரும் சாப்பிட பிறகு மிச்சம் இருக்கும் சப்பாத்தி மாவினை பிரிட்ஜில் வைத்து மறுநாள் எடுத்து சப்பாத்தி சுடுவோம். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான செயல். இச்செயல் ராகுவை பாதிக்கக்கூடியதாகும்.
இவ்வாறு செய்தால், உங்கள் ஜாதகத்தில் ராகு மோசமான பார்வையை அளிப்பதால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |