கடவுளை எப்படி வணங்க வேண்டும்
பொதுவாக நம்மில் பலருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது கட்டாயம் இருக்கும். என்ன தான் நாம் வாழும் இந்த உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறினாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சரி நம்மில் பலருக்கும் கோவிலுக்கு செல்லும் வழக்கம் இருக்கிறது. அப்படி நாம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய், பூ, வாழைப்பழம், சூடம், பத்தி, பால் என்று கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் பொருட்கள் வாங்கி செல்வோம். அட இதெல்லாம் அனைவருமே வாங்கி செல்வார்கள். சரி கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? கடவுளை கண் மூடி வணங்கலாமா..? வாங்க தெரிந்து கொள்வோம்.
140 நாட்களுக்கு பிறகு சனி பகவான் நேருக்கு நேர் மாறுகிறார்.. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாற போகிறது.. |
ஏன் கடவுளை கண் மூடி வணங்க கூடாது..?
பொதுவாக நாம் அனைவருமே வீட்டு பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடும் போது கண்களை மூடி இறைவனை வணங்குவோம். இது காலகாலமாக நடந்து வருவது தான்.
ஆனால் கடவுளை வணங்கும் போது கண்களை மூட கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஏன் என்று இங்கு காணலாம்.
நாம் கோவிலுக்கு சென்று இறைவனை காண்பது என்பது சில மணித்துளிகள் தான். அந்த நேரத்திலும் நாம் கண்களை மூடி இறைவனை காணாமல் விட்டுவிடுகிறோம்.
அதனால் கடவுளின் சிலை கண் முன்னே இருக்கும் போது அவரை கண் திறந்து பார்த்து வணங்குவது தான் சரி. கண்களை மூடி வணங்குவதால் எந்த பயனும் இல்லை.
அதுவே கடவுளின் சிலையோ கண் முன் இல்லாத நேரத்தில் நீங்கள் கண்களை மூடி இறைவனை வணங்கலாம்.
ஆகவே பூஜை அறையிலும் சரி கோவில் சன்னதியிலும் சரி இறைவனை கண் திறந்து வணங்குங்கள். அதுவே சரியான முறையாகும்.
சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்ட போகிறது..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |