புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம், செய்ய கூடாது என்று தெரியுமா.?

why are not purattasi month celebrated in tamil

புரட்டாசி மாதம் செய்ய கூடாதவை

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம் எந்த காரியங்கள் செய்ய கூடாது என்று தெரிந்துகொள்வோம். புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் தான் பெருமாள் கடவுளை நினைத்து விரதம் இருப்பார்கள்.  புரட்டாசி மாதம் முழுவதும் சைவம் மட்டும் சாப்பிடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மாட்டார்கள். சில சுப நிகழ்ச்சிகள் நடத்தலாம், சில சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாது  அது என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ?

புரட்டாசி மாதம் திருமணம் செய்யலாமா:

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் 15 நாட்கள் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பார்கள். அப்போது வீட்டில்  சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. அதுமட்டுமில்லாமல் பெருமாளை நினைத்து விரதம் இருக்கும் நாட்களில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்துக்களில் திருமணம் நிகழ்ச்சிகள் நடத்த மாட்டார்கள். மற்ற மதத்தினை சேர்ந்தவர்கள்  திருமணம் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா.?

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போக கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த வீடாக இருந்தாலும் பால் காய்ச்ச கூடாது.

புரட்டாசி மாதம் வளைகாப்பு செய்யலாமா.?

புரட்டாசி மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தலாம். ஏனென்றால் இந்த நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும் நடக்க கூடிய நிகழ்ச்சியினால் வளைகாப்பு நடத்தலாம்.

புரட்டாசி மாதம் தொழில் தொடங்கலாமா.?

புரட்டாசி மாதத்தில் வர கூடிய விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிப்பார்கள். விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கலாம்.

புரட்டாசி மாதத்தில் புதிதாக தொழில் தொடங்கலாம். அந்த தொழில் நன்றாக வளர்ச்சி அடையும்.

எந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம்:

சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு சில மாதங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி போன்ற மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் தம்பதிகள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது.?

புரட்டாசி மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். மழை காலம் ஆரமிக்க கூடிய நாட்கள். அதனால் நம் உடல் சூட்டை ஏற்படுத்தும். அதனால் இந்த நேரத்தில் அசைவம் சேர்த்தால் மேலும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  உடல் நலத்தை பாதுகாப்பதற்காக அசைவம் சாப்பிட கூடாது. அதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தம் பயனளிக்கும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்