கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க என்ன காரணம்? – Why Reason for the House Under Construction to Stop Halfway?
ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான பதிவுகளை பதிவு செய்து வருகிறோம், அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் பலர் ஆசை ஆசையாக வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அந்த வீடு கட்டும் பணியாது திடீர் என்று இன்று பல வருடங்களாக அந்த வீடு கட்டி முடிக்க முடியாமல் பாதியிலே அந்த வீடு நிற்கும். அத்தகைய வீட்டிற்கும் வாஸ்துவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
கட்டி முடிக்க முடியாமல் பாதியில் நிற்கும் வீட்டிற்கு வாஸ்து காரணமாக இருக்குமா?
ஜோதிடம் பார்த்து, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, வாஸ்து நாள் பார்த்து, எல்லாம் சரியாக பார்த்து தொடங்கிய கட்டிடம் பல காரணங்களால் நிற்பதை நாம் பலர் கண்டிருக்கலாம்.
அந்த கட்டிடம் வாஸ்து முறைப்படி இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் கட்டிட பணியில் கட்டும் முறையில் இது மிகபெரிய பங்காற்றுகிறது.
வாஸ்து என்பது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. அந்த பஞ்சபூதங்களுக்கு எந்தவிதமான இடையூறுமின்றி சரியான முறையில் கட்டிடங்களையும், அறைகளையும் அமைப்பதுதான் வாஸ்து.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!
வீடு கட்ட ஒருவர் சிறந்த வரைபடம் பெற்றாலும், அந்த வீட்டை கட்டுபவர்களின் மனநிலை அவர்களின் சூழ்நிலைகள், எதை முதலில் செய்ய வேண்டும்? மற்றும் எதை கடைசியில் செய்ய வேண்டும்> என்று பக்குவம் தெரிந்திருந்தால் மட்டுமே ஒரு சிறந்த கட்டிடத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டி முடிக்க முடியும்.
உதாரணமாக, வீடு கட்ட தொடங்கும் முன் கட்டுமான பொருட்களை சேமிக்க சிறிய அளவில் ஒரு அறையை நமது மனையிலோ அல்லது பக்கத்திலோ நாம் உருவாக்குவோம். இது அமையும் திசையும், நம் கட்டிட தேவைகளுக்காக ஒரு நிலத்தடி நீர் தொட்டி தேவைப்படும் போது அதற்காக செப்டிக் டேங்க்-ஐ முதலில் கட்டுதல் போன்றவையும் வீடு பாதியில் நிற்பதற்க்கான சில காரணங்களாக கொள்ளலாம்.
பணம் இருக்கிறது என்பதால் எல்லோராலும் எல்லா நேரங்களிலும், எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியாது. காரணம், ஒரு நகரத்தின் அடையாளமே அந்த நகரில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களில் பெரிய கட்டிடங்களை அடையாளமாக காண்பர்.
ஆனால், இதையெல்லாம் செய்து முடிக்க தலைசிறந்த பொறியாளர்கள் மட்டுமல்லாமல் முதலில் அச்சாணியாகத் திகழ்வது வாஸ்து நிபுணர்.
உங்களிடம் பணம் இருக்கலாம், கட்டிடம் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் இருக்கலாம், வேலை செய்ய ஆட்களும் தயாராக இருக்கலாம். ஆனால், எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? என்ற ஐயத்தில் ஆண்டுகள் பல கடந்திருக்கலாம்.
உங்கள் வீட்டு கட்டிடப்பணி தீர்வு பெற, புதிதாக தங்களுக்கென்று வீடு கட்ட ஒரு சிறந்த அனுபவமிக்க வாஸ்து நிபுணர்கள் தங்களுக்கான வாஸ்து நிபுணர்கள் தங்களுக்கான தக்க ஆலோசனைகளை வாங்கும்போது தாங்கள் சிறப்பானதொரு வீட்டை அமைத்து கொண்டு நல்லதொரு வாழ்வை வாழலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |