Why Soorasamharam Not Performed in Tiruttani Temple in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.இப்பதிவில் சூரசம்ஹாரம் நடக்காத முருகனின் படை வீடு எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறும் முருகனின் அறுபடை வீடுகள் ஆகும். கந்த சஷ்டி கவசம் என்னும் விழாவில் இறுதி நாளான சூரசம்ஹாரம் விழாவானது அனைத்து முருகன் கோவில்களிலும் மிகவும் கோலாகலமாக நடைபெறும். ஆனால், அறுபடை வீடுகளில் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது.
எனவே, முருகனின் அறுபடை வீடுகளில் எந்த வீட்டில் சூரசம்ஹாரம் விழா நடைபெறவில்லை என்பதனையும், ஏன் அந்த ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாததற்கான காரணத்தை பற்றியும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகனின் படை வீடு எது தெரியுமா.?

சூரசம்ஹாரம் நடக்காத முருகனின் படை வீடு ஐந்தாம் படை வீடான திருத்தணி ஆகும். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது. இக்கோவில்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலகங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கந்த சஷ்டி விழாவின்போது அணைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் முருகனின் முக்கிய தலங்களான அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதில்லை.
காரணம் என்னவென்றால், முருகன் சூரபத்மனை திருச்செந்தூரில் வதம் செய்த பிறகு, முருகன் அங்கிருந்து வந்து திருத்தணி மலையில் சாந்தமானார். திருச்செந்தூரில் முருகன் சூரனை வதம் செய்தாலும், அவரின் கோபம் அடங்கவில்லை. தணிகை (திருத்தணி) வந்த பிறகு தான் கோபம் தணிந்தது.

சூரசம்ஹாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாற்று கதை என்ன.?
இதனால், திருத்தணியில் சூரசம்ஹாரம் விழா நடத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக, உற்சவராகிய சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வள்ளியின் கரம் பிடிக்க வேடர்களுடன் முருகன் போரிட்ட பின், மறுமலர்ச்சி வந்த பின், முருகன் சாந்தமடைந்து அமர்ந்தார். எனவே, திருத்தணி தலம் ஆனது, முருக பெருமானின் கோபம் தணிந்து மன அமைதி பெற்ற தலமாகும்.
தணிகை என்பதன் பொருள் சினம் தணிதல் ஆகும். திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














