வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன்.?

Updated On: February 6, 2024 5:43 PM
Follow Us:
Why worship in the temple in tamil
---Advertisement---
Advertisement

கோவிலில் அர்ச்சனை செய்வதற்கான காரணம் 

நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது. சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

அர்ச்சனை செய்வது ஏன்.?

கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும். மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.

அர்ச்சனை என்பதன் பொருள் தெரியுமா.?

பெயர், ராசி வைத்து அர்ச்சனை செய்வது:

அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.

அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள்.  பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம்  கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.

சாமி பெயரில் அர்ச்சனை செய்வது:

ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now