கைரேகை உணர்த்தும் பலன்கள்
பொதுவாக முன்னோர்கள் நம் உடல் உறுப்புகளை வைத்து ஒவ்வொரு பலன்கள் கூறுவார்கள். அதவாது ஏர் நெத்தி இருந்தால் ஏரோபிளான் செல்வாய். சிங்கப்பல் இருந்தால் அதிர்ஷ்டம். கையில் ஓட்டை இருந்தால் பணம் தங்கவே தங்காது, கால் விரலானது கட்டை விரலுக்கு பக்கத்து உள்ள விரலானது பெரிதாக இருந்தால் கணவனுக்கு அடங்க மாட்டாய் என்று சொல்வார்கள். இப்படி கூறும் போது சில நபர்கள் நம்புவார்கள், சில பேர் அதெல்லாம் பொய் என்று கூறிவிடுவார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதாவது கைரேகை x குறி இருந்தால் என்ன பலன்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உள்ளங்கையில் x குறி இருந்தால்:
x குறியை ஆண்களாக இருந்தால் வலது கையையும் பெண்களாக இருந்தால் இடது கையை பார்க்க வேண்டும்.
உள்ளங்கையில் x குறியானது ஆள்க்காட்டி விரலுக்கு கீழே இருந்தால் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
சுக்கிர மேடானது வலுப்பெற நிலையில் கணவன் கையில் இருந்தால் மனைவி நல்ல குணம் உடையவர்களாக இருப்பார்கள். அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பார்கள். அதுவே மனைவி கையில் இருந்தால் கணவன் உங்கள் சொல் படி நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள்.
உப்பு ஜாடியை இந்த இடத்தில் வைய்யுங்க அள்ள அள்ள வற்றாத அளவில் பண வரவு ஏற்படும்
அடுத்து உள்ளகையில் கீழே x குறி இருந்தால் தண்ணீர் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வெளியிலோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்த்தால் உங்களின் வேலைகளை கண்டு ஒருத்தர் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள்.
சுக்கிர மேட்டில் x இருந்தால் இல்லற வாழ்க்கையில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.
இருதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் எடையில் x குறி இருந்தால் யோகம் உடையவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதனை மீண்டு வந்துவிடுவீர்கள்.
நடுவிரலுக்கு நடுவில் x குறி இருந்தால் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆயுள் குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
சுண்டி விரலுக்கு கீழே x குறி இருந்தால் முடிவுகளை எடுப்பதற்கு குழப்படைவீர்கள். அதனால் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது உங்களுடைய நெருங்கியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |