தீபாவளி முதல் நாள் ஏற்ற வேண்டிய எம தீபம்.! தேதி மற்றும் நேரம்.!

Advertisement

Yama Deepam 2024 Date and Time in Tamil | எம தீபம் ஏற்றும் நேரம் 2024

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீபாவளி முந்தைய நாளில் ஏற்ற வேண்டிய எம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்.? யார் ஏற்றலாம்.? யார் ஏற்றக்கூடாது.? உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். எம தீபம் என்பது, எம தர்ம ராஜாவை மகிழ்விக்கும் தீபம் ஆகும். எம தீபம் ஏற்றுவதால் தேக ஆரோக்கியம், நீண்ட  ஆயுள், செல்வ வளம் நிலைத்து இருக்கும். அதுமட்டுமில்லாமல், எம தீபம் ஏற்றுவதால் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மஹாளய பட்சத்திற்கு பூலோகம் வந்த பித்ருக்களை எம தர்ம ராஜ  தீபாவளிக்கு முந்தைய நாட்களில் தான் பித்ருலோகத்திற்கு அழைத்து செல்வார்கள். எனவே, நாம் வீட்டில் எம தீபம் ஏற்றினால், நம் முன்னோர்கள் நாம் தீபம் ஏற்றுவதை பார்த்து மகிழ்ந்து பித்ருலோகத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம்.

எம தீபம்,  மஹாளய பட்சத்தில் வரும் மஹா பரணியிலும், தீபாவளிக்கு முந்தைய தினத்தில் வரக்கூடிய திரையோசதசி திதியில் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. எம தீபம் ஏற்றினால் பல்வேறு நற்பலன்களை பெறலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். திருமண தடைகள் நீங்கும். இப்படி அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். எம தீபத்தை உயரமான இடத்தில் தான் ஏற்ற வேண்டும். எம தீபம் ஏற்றுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே ஏற்ற வேண்டும்.

எம தீபம் ஏற்ற வேண்டிய நேரம் 2024:

எம தீபம் ஏற்றும் நேரம் 2024

 தீபாவளிக்கு முந்தைய நாள் வரும் திரயோதசி திதி நேரத்தில் தான் எம தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு 2024 தீபாவளிக்கு முன்னதாக வரும் திரயோதசி திதி ஆனது, அக்டோபர் 29 ஆம் தேதி அன்று காலை 10:31 AM மணிக்கு தொடங்கி மறுநாள் அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல் 01:15 நிமிடம் வரை இருக்கிறது. எனவே, இந்நேரத்திற்கு குள்ளாக தான் எம தீபம் ஏற்ற வேண்டும். சரியான நேரம் எதுவென்றால் அக்டோபர் 29 ஆம் தேதி மாலை 05:26 PM முதல் 06:45 PM நிமிடத்திற்குள் ஏற்ற வேண்டும். இந்நேரத்தில் ஏற்றுவது நல்லது. தீபத்தை பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும். நாம் ஏற்றிய எம தீபம் ஆனது, குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஆவது எரிய வேண்டும். எம தீபம் ஏற்றுவதால் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, எம தர்ம ராஜாவும் மகிழ்ச்சி அடைவார்.

மேலும், எம தீபம் என்றால் என்ன.? ஏற்றும் நேரம்.? யார் ஏற்ற வேண்டும்.? யார் ஏற்றக்கூடாது.? போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

தீபாவளிக்கு ஏற்றும் எம தீபம் என்றால் என்ன? அது எப்படி ஏற்றுவது.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement