Yathiraiyam Yathirai Song Lyrics in Tamil
இந்து கடவுள்களில் முக்கியமானவர் ஐயப்பன் சுவாமி. ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியாவில் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத தொடக்கத்தில் பக்தர்கள் ஐயப்பன் சுவாமிக்கு மாலை போட்டு 48 நாட்கள் விரதம் இருந்து மார்கழி மாத இறுதியில் சபரிமலை ஐயப்பனை வழிபட செல்வார்கள். இந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பான முறையில் வழிபாடு செய்து விரதம் இருந்து வருவார்கள்.
பக்தர்கள், ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும், கோவில்களில் தினமும் ஒரு ஐயப்ப பக்தரின் மண்டாபடி நடக்கும். பொதுவாக, நாம் எதை செய்தாலும் 1 மண்டலம் தொடர்ந்து செய்தால் அதற்கான பலன்களை பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். அதேபோலத்தான் ஐயப்பன் சுவாமிக்கு 1 மண்டலம் மாலை அணிந்து சுத்தமாக இருந்து விரதம் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அந்த ஐயப்பன் சுவாமியின் முழு ஆசியும் கிடைக்கும். எனவே, இப்பதிவில் ஐயப்பன் சுவாமியை போற்றி பாடக்கூடிய பாடல்களில் ஒன்றான யாத்திரையும் யாத்திரை சபரிமலை யாத்திரை பாடல் வரிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
யாத்திரையும் யாத்திரை சபரிமலை யாத்திரை பாடல் வரிகள்:
சுவாமியே…
சரணம் ஐயப்பா
சத்குரு நாதனே…
சரணம் ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
மலை அணிந்து
நோம்பு இருந்து ஐயப்பா
காவி அணிந்து
காத்துக்கிடந்தோம் ஐயப்பா
சபரிமலை யாத்திரைக்கு
வாரோம் வாரோம்
சத்தியத்தின் கோட்டைக்குள்ள
வாரோம் வாரோம்
சபரிமலை யாத்திரைக்கு
வாரோம் வாரோம்
சத்தியத்தின் கோட்டைக்குள்ள
வாரோம் வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
ஏ மார்கழியில் யாத்திரை
மலை வழியில் யாத்திரை
மௌன மொழி பேசும் யாத்திரை
பூ மழையில் யாத்திரை
புல்வெளியில் யாத்திரை
முன் பனியில் போகும் யாத்திரை
காலையில் எழுந்து
கோவில் அடைந்து ஐயப்பா
பூஜை மகிழ்ந்து
கோஷம் எழுத்தோம் ஐயப்பா
எருமேலி வாவர் கண்டு
வாரோம் வாரோம்
எங்கே உந்தன் தோழன் என்று
கேட்டு வாரோம்
எருமேலி வாவர் கண்டு
வாரோம் வாரோம்
எங்கே உந்தன் தோழன் என்று
கேட்டு வாரோம்
ஐயப்பனின் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் பாடல் வரிகள்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
பாரம் ஏற்கும் யாத்திரை
பாவம் தீர்க்கும் யாத்திரை
பக்குவத்தை சேர்க்கும் யாத்திரை
சாமி பாதம் காட்டும் யாத்திரை
பாசம் காட்டும் யாத்திரை
பக்தி கொண்டு போகும் யாத்திரை
பாட்டுப் படிச்சு
வேட்டு வெடிச்சு ஐயப்பா
ஆக்கி படைச்சு
தானம் அளிச்சோம் ஐயப்பா
அழுதமலை மேடு கண்டு
வாரோம் வாரோம்
அழுத மனம் தேற்ற உன்னை
காணோம் காணோம்
அழுதமலை மேடு கண்டு
வாரோம் வாரோம்
அழுத மனம் தேற்ற உன்னை
காணோம் காணோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
குருவுடனே யாத்திரை
பெருவழியில் யாத்திரை
திருவருளை தேடும் யாத்திரை
ஞானம் தரும் யாத்திரை
நாலும் தரும் யாத்திரை
நடைவழியா போகும் யாத்திரை
கோபம் விடுத்து
தாபம் விடுத்தது ஐயப்பா
வாதம் விடுத்தது
பாதம் நினைத்தோம் ஐயப்பா
கரிமலையின் ஏத்தம் கண்டு
வாரோம் வாரோம்
கடும்வழியில் தேடி உன்னை
வாரோம் வாரோம்
கரிமலையின் ஏத்தம் கண்டு
வாரோம் வாரோம்
கடும்வழியில் தேடி உன்னை
வாரோம் வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
கானகத்தில் யாத்திரை
கட்டுமுடி யாத்திரை
கல்லும் முள்ளும் தீண்டும் யாத்திரை
மாமலையில் யாத்திரை
மலர்வனத்தில் யாத்திரை
மன்னன் உன்னை காணும் யாத்திரை
போகம் விடுத்தது
மோகம் விடுத்தது ஐயப்பா
யாகம் வளர்த்து
யோகம் அடைந்தோம் ஐயப்பா
பம்பையிலே தீபம் இட்டு
வாரோம் வாரோம்
பந்தி இட்டு காத்திருந்து
வாரோம் வாரோம்
பம்பையிலே தீபம் இட்டு
வாரோம் வாரோம்
பந்தி இட்டு காத்திருந்து
வாரோம் வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
காரிருளில் யாத்திரை
கடுங்குளிரில் யாத்திரை
குண்டும் குழி தீண்டும் யாத்திரை
ஏ தூக்கம் இல்லா யாத்திரை
தொடருதையா யாத்திரை
துள்ளி துள்ளி போகும் யாத்திரை
தாயை மதித்து
தாரம் மதித்து ஐயப்பா
ஊரை மதித்து
பேரை எடுத்தோம் ஐயப்பா
நீலிமலை ஏத்ததுக்கு
வாரோம் வாரோம்
நீண்ட வழி தேடி உன்னை
வாரோம் வாரோம்
நீலிமலை ஏத்ததுக்கு
வாரோம் வாரோம்
நீண்ட வழி தேடி உன்னை
வாரோம் வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
சாமிமாரு யாத்திரை
சலனமில்லா யாத்திரை
சந்தனப்பூ காட்டில் யாத்திரை
பூலோக யாத்திரை
புண்ணிய திரு யாத்திரை
கண்ணியத்தை காக்கும் யாத்திரை
சாதி மறந்து
பேதம் மறந்து ஐயப்பா
நீதி அறிந்து
நேர்மை அடைந்தோம் ஐயப்பா
அப்பாச்சி மேடு கண்டு
வாரோம் வாரோம்
அப்பா உன்னை அங்கே இங்கே
தேடி வாரோம்
அப்பாச்சி மேடு கண்டு
வாரோம் வாரோம்
அப்பா உன்னை அங்கே இங்கே
தேடி வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
ஆடி பாடும் யாத்திரை
அஞ்சு மலை யாத்திரை
பிஞ்சு பாதம் ஏங்கும் யாத்திரை
கூடி போகும் யாத்திரை
கோஷம் போடும் யாத்திரை
நெய் மணக்கும் நீண்ட யாத்திரை
வீடு மறந்து
காடு நினைந்து ஐயப்பா
நாடு துறந்து
நாடி அடைந்தோம் ஐயப்பா
சபரி பீடம் பார்த்துப்புட்டு
வாரோம் வாரோம்
சபரி அன்னை காதில் உன்னை
கேட்டு வாரோம்
சபரி பீடம் பார்த்துப்புட்டு
வாரோம் வாரோம்
சபரி அன்னை காதில் உன்னை
கேட்டு வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
சாமி திந்தக்க தோம் தோம்
ஐயப்ப திந்தக்க தோம் தோம்
ஐயப்ப திந்தக்க தோம் தோம்
சாமி திந்தக்க தோம் தோம்
ஏற்று வந்த யாத்திரை
ஏற்றம் தரும் யாத்திரை
ஏழு கோட்டை தாண்டும் யாத்திரை
நல்ல மாற்றம் தரும் யாத்திரை
மகிமையுள்ள யாத்திரை
மாலையிட்ட சாமி யாத்திரை
தேதி நினைத்து
தேகம் இழைத்து ஐயப்பா
தேடி அலைந்து
தேசம் அடைந்தோம் அயப்பா
சரங்குச்சி ஆழம் கண்டு
வாரோம் வாரோம்
சபரிநாதன் உன்னை எண்ணி
வாரோம் வாரோம்
சரங்குச்சி ஆழம் கண்டு
வாரோம் வாரோம்
சபரிநாதன் உன்னை எண்ணி
வாரோம் வாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
யாத்திரையும் யாத்திரை
சபரிமலை யாத்திரை
சரண மழை தூவும் யாத்திரை
ஏ காட்டு வழி யாத்திரை
கால் கடுக்கும் யாத்திரை
கன்னிசாமி போகும் யாத்திரை
ஷேமம் தரும் யாத்திரை
செல்வம் தரும் யாத்திரை
சீர் கொடுக்கும் சபரி யாத்திரை
மோட்சம் தரும் யாத்திரை
முக்தி தரும் யாத்திரை
சக்திய பொன் சபரி யாத்திரை
ஜோதி கலந்து
சோகம் மறந்து ஐயப்பா
காண கிடந்து
காட்சி அடைந்தோம் ஐயப்பா
பதினெட்டு படி ஏறி
வாரோம் வாரோம்
அபிஷேக நெய் உனக்கு
தாரோம் தாரோம்
பதினெட்டு படி ஏறி
வாரோம் வாரோம்
அபிஷேக நெய் உனக்கு
தாரோம் தாரோம்
சாமியப்பா சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா சாமியப்பா ஐயப்பா
சுவாமியே…
சரணம் ஐயப்பா
சாந்த மலை ஜோதியே…
சரணம் ஐயப்பா
பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |