Yegathasi Andru Seiya Koodathavai | ஏகாதசி அன்று செய்ய கூடாதவை
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! நம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு தினமும் பல பயனுள்ள ஆன்மீக தகவல்களை கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக ஏகாதசி அன்று செய்ய கூடாதவை என்னென்ன என்று தெரிந்துகொள்ள போகின்றோம். பொதுவாக ஏகாதசி பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நம்மில் பலரும் ஏகாதசி விரதம் இருப்பார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வருகிறது. அதனால் மாதம் மாதம் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி மாதம் மாதம் வரும் ஏகாதசியில் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக ஏகாதசி அன்று செய்ய கூடாதவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க காரணம் என்ன தெரியுமா
ஏகாதசி என்றால் என்ன..?
பொதுவாக இந்து சமயத்தில் பல கடவுள் இருக்கிறார்கள். அதில் முதன்மை கடவுளாக இருப்பவர்கள் தான் மும்மூர்த்திகள். அந்த மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது தான் இந்த ஏகாதசி விரதம் ஆகும்.
இந்த ஏகாதசி விரதமானது, மாதம் மாதம் வருகிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியானது மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. அதுபோலவே இந்த மாதம் மாதம் வரும் ஏகாதசியும் சிறப்பு பெற்றது தான். அதனால் தான் நம்மில் பலரும் மாத ஏகாதசியில் விரதம் இருக்கிறார்கள்.
சரி பொதுவாக ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். அதாவது இந்த காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை தான் ஏகாதசி என்று கூறுகிறார்கள்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், அமாவாசை நாளுக்கும், பூரணை நாளுக்கும் அடுத்து வரும் 11 -ஆவது திதி தான் ஏகாதசி ஆகும். மேலும் இந்த ஏகாதசி என்னும் வடமொழிச் சொல்லுக்கு 11 என்னும் பொருள் தருகிறது.
அதுபோல அமாவாசைக்கு அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணை நாளுக்கு அடுத்த வரும் ஏகாதசியைக் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் கூறுகின்றனர்.
ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா..
ஏகாதசி அன்று செய்ய கூடாதவை:
பொதுவாக ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் சில விஷயங்களை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. அவை என்னவென்று கீழ் காண்போம்.
- ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
- துளசி இலைகள் வேண்டும் என்றால், முதல் நாளே பறித்து கொள்ள வேண்டும்.
- ஏகாதசி திதியில் வீட்டில் இறந்தவர்களுக்கு நினைவு நாள் வந்தால், அன்று திதி ஏதும் செய்யக்கூடாது.
- அதற்கு பதிலாக மறுநாள் துவாதசி திதி கொடுக்கலாம் அன்று நடத்தலாம்.
- ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பவர்களை, கேலியோ கிண்டலோ செய்ய கூடாது.
- ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதத்தை கூட வாங்கி சாப்பிட கூடாது.
- மீறி பிரசாதம் வாங்கினாலும் அதை அங்கு இருக்கும் முதியவர்கள் அல்லது குழந்தைகளிடம் கொடுத்து விடலாம்.
- அதுபோல உண்ணாமலும் உறங்காமலும் ஏகாதசி விரதம் இருந்தவர்கள், மறுநாள் துவாதசி அன்று பகலில் உறங்க கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |