வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சோமாவதி அமாவாசையில் சூரிய கிரகணம்..! இந்த ராசிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Updated On: April 8, 2024 11:05 AM
Follow Us:
Zodiac People To Be Careful With Solar Eclipse in Tamil
---Advertisement---
Advertisement

Zodiac People To Be Careful With Solar Eclipse in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக வரப்போகின்ற சூரிய கிரகணத்தால் எந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதுவும் இந்த சூரிய கிரகணமானது சோமாவதி அமாவாசை நாளில் வருகிறது. அதாவது இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமே இது தான். இந்த சூரிய கிரகணமானது ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நிகழவுள்ளது.

அதுபோல சூரிய கிரகணமானது ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. ஆனால் சூரிய கிரகணமானது மங்களகரமானதாக பார்க்கப்படுவதில்லை. காரணம், ஜோதிட சாஸ்திரப்படி கிரகணத்தின் போது சூரியன் ராகுவால் பாதிக்கப்படுகிறது. இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் 12 ராசிகளில் சில ராசிகளுக்கு அதன் தாக்கம் ஏற்படும். அப்படி சூரிய கிரகணத்தால் அதிக தாக்கம் ஏற்படும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் துரத்தப்போகும் ராசிகள் இவர்கள் தானா

சூரிய கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்: 

கும்பம்: 

கும்ப ராசி

இந்த சூரிய கிரகணத்தால் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் சில தடைகள் காணப்படும். கிரகணத்தின் தாக்கத்தால் வேலையில் பல சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்தில் சரிவு உண்டாகும். இந்த நேரத்தில் பண நஷ்டம் அதிகமாக காணப்படும். இந்த சூரிய கிரகணத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்: 

மிதுன ராசி

சோமாவதி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணத்தால், மிதுன ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டும். பண விஷயங்களில் தொடங்கி, வாகனம் ஓட்டுவது வரை அனைத்திலும் கவனம் தேவை. இந்த கிரகணத்தால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவர்கள் எதை பற்றியுமே கவலைப்பட மாட்டார்களாம்.. இதில் நீங்கள் இருக்கிறீர்களா..

விருச்சிகம்:

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சூரிய கிரகணத்தின் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நலல்து. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருக்கும் வேலையை விடாமல் பார்த்து கொள்வது நல்லது. உடல் நலத்தை பராமரிப்பது அவசியம்.

கடகம்: 

கடக ராசி

இந்த சோமாவதி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணத்தால், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்கள் நினைப்பது நடக்காமல் போகலாம். இந்த நேரத்தில் மனம்  தளராமல் இருக்க வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சிக்கல்கள் வராமல் பார்த்து கொள்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இந்த கிரகண நேரத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

என்னது இந்த ராசிக்காரர்கள் துரோகம் செய்வார்களா.. அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now