100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்..! இனி இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..!

Advertisement

Zodiac Signs Lucky By Lunar Eclipse in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மீக பதிவின் வாயிலாக நாம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் அதிக நம்பிக்கை இருக்கும். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

அதுபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது நன்மைகளும் தீமைகளும் உருவாகின்றன. சரி இப்போது சந்திர கிரகணம் உருவாகியுள்ளது. அதாவது மார்ச் 25.03.2024 அன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணமானது பங்குனி உத்திரத்தன்று வருகிறது. இந்த நிகழ்வானது 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் சில ராசிகளின் வாழ்க்கை அதிர்ஷ்டகரமாக மாறப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சந்திர கிரகணத்துக்கு பிறகு சூரியன், ராகு, கேது பெயர்ச்சியால் ராஜ யோகம் கிடைக்கும் ராசிகள்

சந்திர கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..? 

கன்னி ராசி: 

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் பல நன்மைகள் நடக்கப்போகிறது. உங்கள் திறமைக்கான பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மேலும் பல நற்பலன்கள் தேடி வரும்.

மேஷ ராசி: 

மேஷ ராசி

சந்திர கிரகணத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் அதிகமாக காணப்படும். திடீர் பணவரவுக்கு அதிக வாய்ப்புண்டு. எனவே இந்த நேரம் சுப பலன்கள் தேடி வரும் நாளாக இருக்கும்.

சந்திர கிரகணத்தன்று என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய கூடாது..? என்று தெரியுமா..

தனுசு ராசி: 

தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. புதிய அரசு வேலைகள் கிடைக்கும் நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய விருப்பங்கள் அனைத்து நிறைவேறும். உங்களின் பொருளாதார நிலை அதிகரிக்கும். இந்த நேரம் உங்களுக்கு பொன்னான நேரமாக இருக்கும்.

ரிஷப ராசி: 

ரிஷப ராசி

சந்திர கிரகணத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பதவி உயர்வு கிடைக்கும் நேரம் இது தான். நீங்கள் தொடங்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்காக சம்பள உயர்வு கிடைக்கும். இது வரை இருந்த கஷ்டங்கள் நீங்கி மனஅழுத்தங்கள் குறையும். எனவே இது ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் நேரமாக இருக்கும்.

சந்திர கிரகணத்தின் போது மறந்தும் இதை செய்யாதீர்கள்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement