வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி மற்றும் புதனால் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைய போகும் ராசிகள்

Updated On: June 4, 2025 3:07 PM
Follow Us:
Zodiac signs that are touched by Saturn and Mercury will achieve success
---Advertisement---
Advertisement

சனி மற்றும் புதனால் தொட்டதெல்லாம் வெற்றி அடைய போகும் ராசிகள்

சனி பகவான் நம்முடைய வாழ்க்கையில் நடக்க கூடிய எல்லா நன்மைகள் மற்றும் தீமைகளுக்கும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். எல்லா கிரங்களையும் ஒப்பிடும் போது சனி பகவான் தான் முக்கியமாக கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நகரக்கூடியவர். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியிலே 2027-ம் ஆண்டு வரை பயணிப்பார். ஜூன் 9-ம் புதன் பகவான் சேரவுள்ளார். இதனால் கேந்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் ஆனது எல்லா ராசிகளும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும்  பல நன்மைகளை தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன் சேர்க்கையானது எல்லா விதத்திலும் மகிழ்ச்சியை கொடுக்க கூடியதாக இருக்கும். வேலை பார்க்கும் இடம் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்களின் பேச்சு திறமையால் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் மேல் அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். வாழ்க்கையில் வளர்ச்சி காணப்படும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். இதுவரை முடிக்க முடியமால் இருந்த வேலைகள் ஆனது முடிவுக்கு வரக்கூடும்.

மகரம்:

சனி மற்றும் புதன் சேர்க்கையானது மகர ராசிக்காரர்களுக்குஎல்லா செயல்களிலும் வெற்றியை தரக்கூடும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் ஆனது தீரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன் சேர்க்கையானது அதிர்ஷ்டமான ஒன்றாக இருக்கும். இந்த கால கட்டடத்தில் உங்களின் செல்வ நிலையானது அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசை ஆனது நிறைவேறும். உங்களின் துணையின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை ஆனது சரியாகும். படிக்கும் மாணவர்கள் இந்த காலத்தில் சிறந்து விளங்குவார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now