Zodiac Signs That Get Lucky With Chaturgraha Yoga in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பொதுநலம் ஆன்மிகம் பதிவின் வாயிலாக சதுர்கிரக யோகத்தால் பல நற்பலன்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் 12 ராசிகளிலும் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அப்படி ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தற்போது மீனத்தில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால், அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!
ராகுவோடு சேரும் சுக்கிரன்.. வீட்டு வாசலில் நிற்கிறது அதிர்ஷ்டம்.. உள்ளே அழைக்கப்போகும் ராசிகள்..
சதுர்கிரக யோகத்தால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள்:
கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் ஏப்ரல் 23 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். அதேநேரம் மீன ராசியில் ஏற்கனவே ராகு, புதன், சுக்கிரன் மூவரும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாயும் மீன ராசிக்கு செல்வதால், இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த சதுர்கிரக யோகமானது 100 ஆண்டுகளுக்கு பின் 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகிறது. ஆகவே இந்த சதுர்கிரக யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் அதிக நற்பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களின் 10 ஆம் வீட்டில் தான் இந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகமாக காணப்படும். புதிதாக சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிதாக வேலைகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில் பணவரவு அதிகமாக காணப்படும்.
புத்தாண்டில் எதை தொட்டாலும் வெற்றி.. அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார்..
தனுசு ராசி:
இந்த சதுர்கிரக யோகமானது தனுசு ராசிக்காரர்களின் 4 ஆம் வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் காணப்படும். இந்த சதுர்கிரக யோகத்தால் புதிதாக வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பரம்பரை சொத்துக்கள் வந்து சேரும் நேரம் இது. உங்களுடைய குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்களின் 9 ஆம் வீட்டில் தான் இந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக கடக ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகமாக கிடைக்கப்போகிறது. பணிபுரியும் கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் நற்பலன்களை பெறுவீர்கள். இந்த சதுர்கிரக யோகத்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் நேரம் இது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சமூக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |