செவ்வாய் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Signs That Get Lucky With Transit of Mars in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயினால் அதிருஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் தற்போது ரிஷப ராசியில் செவ்வாய் அதிபதியாக கொண்ட மிருகசீரிட நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார்.
செவ்வாய் பகவான் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு பணவரவு உண்டாகும். தொழிலில் லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். அந்த ராசிகள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி:
செவ்வாய் பகவான் மேஷ ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இப்பெயர்ச்சியினால் தொழில் ரீதியாக பல நல்ல வாய்ப்புகளையும் லாபத்தையும் பெறலாம். முக்கியமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, அனைத்து வகையிலும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் வேலை மாற்றம் பற்றி யோசித்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
விருச்சிக ராசி:
செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதாக இருக்கும். இதுவரை இருந்த அனைத்து தடைகளும் பிரச்சனைகளும் நீங்கும். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் நெருப்பு, மின்சாரம் உள்ளிட்ட ஆபத்தான விஷயத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மற்றபடி, அனைத்து விதத்தில் நன்மை வந்து சேரும்.
சிம்ம ராசி:
செவ்வாய் பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமையில் வளர்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். இருந்தாலும் வண்டி, வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மகர ராசி:
மகர ராசிகாரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆனது குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதன் மூலம் சலுகை கிடைக்கும். ஒரு சிலருக்கு காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |