வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செவ்வாய் கேது சேர்க்கையால் விபத்து ஏற்பட போகும் ராசிகள்

Updated On: May 29, 2025 4:05 PM
Follow Us:
Zodiac signs that may experience accidents due to Mars-Ketu conjunction
---Advertisement---
Advertisement

செவ்வாய் கேது சேர்க்கை விபத்து ஏற்பட போகும் ராசிகள்

ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு தங்களின் ராசியை மாற்றி கொள்ளும். அப்படி மாற்றி கொள்ளும் போது 12 ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிக நன்மைகளையும், அதிக கெட்டதையும் கொடுக்கும். அந்த வகையில் ஜூன் 7-ம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் பயணிக்க போகிறார், கேது பகவான் ஏற்கனவே சிம்ம ராசியில் பயணித்து கொண்டு இருக்கிறார். இந்த சேர்க்கையினால் விஷபோதக யோகம் உருவாக போகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மீனம்:

செவ்வாய் கேது சேர்க்கை விபத்து ஏற்பட போகும் ராசிகள் 

விஷபோதக யோகம் ஆனது மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். சட்ட வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவை தோல்வியே சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பொறுமையாக கையாள வேண்டும். பணியில் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது நீங்கள் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு எதிரிகள் அதிகரிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும். ஏனென்றால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. திருமண வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

செவ்வாய் கேது சேர்க்கையால் 3 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க போகிறது

மகரம்:

செவ்வாய் கேது சேர்க்கை விபத்து ஏற்பட போகும் ராசிகள் 

சிம்ம ராசியில் செவ்வாய், கேது சேர்வதால் மகர ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த  நேரத்தில் பண தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். ஏற்கனவே உங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்து, அவை தீர்ந்திருந்தால் மறுபடியும் அந்த பிரச்சனை ஏற்படும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. துணையிடம் சண்டை இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் உங்களுக்கு பிரச்சனை வரக்கூடும். அதனால் கவனமாக இருங்கள்.

கன்னி:

செவ்வாய் கேது சேர்க்கை விபத்து ஏற்பட போகும் ராசிகள் 

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கேது சேர்க்கையானது சாதமாகமான பலனை கொடுக்காது. பண விஷயத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் செலவுகள் ஆனது அதிகமாக காணப்படும். அதனால் தேவையில்லாத செலவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பணியிடம் ஆனது சாதகமாக இருக்காது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியமானது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now