செவ்வாய் பகவானால் திடீரென்று லாபத்தை பெற கூடிய ராசிகள்

Advertisement

Zodiac Signs That May Get Sudden Yoga For Mars in June 2025

கிரங்களில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாளுக்கு ராசிகளில் மாற்றி கொண்டே இருக்கும். இப்படி ராசிகளை மாற்றுவதால் எல்லா ரசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அள்ளி தரும். அந்த வகையில் கிரங்கங்களில் தளபதியாக இருப்பவர் செவ்வாய் கிரகம். இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் பயணிக்ககூடியவர். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணிக்கிறார். இந்த நிலையில் வருகின்ற ஜூன் மாதம் செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் நுழையவிருக்கிறார். இதனுடைய தாக்கமானது 12 ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அள்ளி தரப்போகிறது. அதுவும் தொழில் ரீதியாக நலன் வளர்ச்சியினை தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

விருச்சிகம்:

செவ்வாய் பகவான் சிம்மத்தில் பெயர்ச்சி 

விருச்சிக ராசியில் 10-வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல விதத்தில் நன்மையை அடைய போகிறார்கள். இதுவரை வேலை இல்லை என்று தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு லாபம் ஆனது இருமடங்காக கிடைக்கும். தொழில் ரீதியாக முதலீடு செய்வது நல்ல பலனை தரும். இந்த நேரத்தில் உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கஜகேசரி யோகத்தால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்ட போகுது

துலாம்:

செவ்வாய் பகவான் சிம்மத்தில் பெயர்ச்சி 

செவ்வாய் பகவான் துலாம் ராசியில் 11-ம் வீட்டில் பெயர்ச்சி அடையவுள்ளார். இந்த நேரத்தில் உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீங்கள் வியாபாரத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் புதிய வீடு அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை ஆனது அதிகரிக்கும். பணம் விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த நேரத்தில் பணவரவு ஆனது அதிகரிக்கும்.

கடகம்:

Cancer zodiac sign

செவ்வாய் பகவான் கடக ராசியில் 2-வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் திடிரென்று பலன்களை பெற போகிறார்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். இதன் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதுவும் விலை உயர்ந்த பொருட்களாக தான் வாங்குவீர்கள். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். செய்யும் செயல்கள் அனைத்திலும் உழைப்போடு அதிர்ஷ்டமும் கூட இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் நீங்கள் எந்த விதமான திட்டம் வைத்திருந்தாலும் அதனை செயல்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் வெற்றியை அடைவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement