54 ஆண்டுகளுக்கு பின் சூரிய கிரகணம்..! இந்த ராசிகள் ரொம்ப கவனமாக இருங்க..!

Advertisement

Zodiac Signs That Need To Be A Little Wary Of The Solar Eclipse in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக சூரிய கிரகணத்தின் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ராசிகளில் கிரகணங்களின் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அதுபோல தற்போது 2024 ஆண்டு சூரிய கிரகணமானது ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.

மேலும், இந்த சூரிய கிரகணமானது இரவு 09:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 01:25 மணிக்கு முடிவடைகிறது. அதுவும் இந்த சூரிய கிரகணமானது 54 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிய நிகழ்வாக இருக்கிறது. அதனால் இந்த சூரிய கிரகணத்தால், ராசிகளில் தாக்கம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்படி சூரிய கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சூரிய கிரகணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்..! தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..

மீனம்: 

மீன ராசி

54 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரிய கிரகணமானது, மீன ராசியில் தான் நிகழ போகிறது. அதனால் மீன ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செய்யும் செயல்கள் அனைத்திலும் அதிக கவனம் தேவை. அதிலும் பண விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி: 

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த சூரிய கிரகணத்தின் போது, அனைத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கிரகணத்தின் தாக்கத்தால் உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும்.. தமிழ்நாட்டில் தெரியுமா.. 

விருச்சிகம்: 

விருச்சிக ராசி

சூரிய கிரகணம் நிகழ்வதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கெட்ட நேரமாக இருக்கப்போகிறது. விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். இந்த நேரத்தில் இருக்கும் வேலையில் இருந்து வெயில் வர நினைக்காதீர்கள்.

மேஷம்: 

மேஷ ராசி

54 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரிய கிரகணத்தின் தாக்கத்தில் மேஷ ராசிக்காரர்கள் சிக்கப் போகிறார்கள். வாழ்க்கையில் பல சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எதிலும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பண விஷயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு: 

தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சூரிய கிரகண நேரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதையோ அல்லது மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். இந்த கிரகண நேரத்தில் உங்களுக்கு சில பிரச்சனைகள் வந்து சேரும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக பேசவேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

சோமாவதி அமாவாசையில் சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement