Zodiac Signs That Will Benefit From The Transit Of Guru in Tamil
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் குருவின் மாற்றத்தால் வாழ்க்கையில் நற்பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் 12 ராசிகளிலும் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இது மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே குரு பகவானின் இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று காணலாம் வாங்க.
மே மாதம் முழுவதும் பணமழை தான்.. அதிர்ஷ்டத்தில் சிக்கிய ராசி நீங்களா..
குருவின் மாற்றம் யாருக்கு அதிர்ஷ்டம்:
நவ கிரகங்களின் தேவர்களுக்கு குருவாக விளங்க கூடியவர் தான் குரு பகவான். இவர் மங்கள நாயகனாக திகழ்ந்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல், குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக இருக்கிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் குரு பகவான் தற்போது குரு பகவான் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். எனவே குரு பகவானின் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. அவை எந்த ராசிகள் என்று தற்போது காண்போம்.
கடக ராசி:
ரிஷப ராசிக்கு குரு பகவான் செல்வதால், உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நடக்கப்போகிறது. இந்த நேரத்தில் குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். பல நல்ல யோகங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது. கடக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குருவின் மாற்றத்தால், திருமணம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்களின் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆகவே குரு பகவானின் மாற்றம் உங்களுக்கு பொன்னான நேரமாக இருக்கப்போகிறது.
மேஷ ராசி:
குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்வதால் உங்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களை பெறப்போகிறீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலங்களில் பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆகவே குரு பகவானின் மாற்றத்தால் பணவரவில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம் ராசி:
குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனம் செய்வதால், உங்கள் வாழ்க்கையில் யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை காண்பீர்கள். வியாபாரம் செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆகவே குருவின் மாற்றத்தால் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |