ராகுவால் கஷ்ட காலம் ஆரம்பிக்க போகும் ராசிகள்
ஒவ்வொரு ராசியில் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். அப்படி மாற்றும் பொழுது அவர்களுக்கு நன்மையும் தீமையும் நடக்கும். அந்த வகையில் ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்தநிலையில் மே மாதம் 18-ம் தேதி மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த பெயர்ச்சியால் சில் ராசிக்காரர்களுக்கு கஷ்டத்தை கொடுக்க போகிறார். அவை எந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ராகு 12-வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியினால் இவர்களின் வாழ்க்கையில் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள். மேலும் திடீரென்று செலவுகள் ஆனது அதிகரிக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மன நிறைவாக இருக்காது. மன நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுவீர்கள். வீட்டில் நிம்மதி இருக்காது. அதை விட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்தாலும் நிம்மதி இருக்காது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். ராகுவால் உங்களுக்கு பெரிதாக பிரச்சனை ஏற்படாமல் இருக்க சனிக்கிழமை தோறும் ராகுவை வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்:

விருச்சிக ராசியில் ராகு பகவான் 4-வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வீட்டில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் மீள் பாசமும், அன்பும் இருக்காது. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் இதயத்தில் பிரச்சனை ஏற்படும். ராகு பெயர்ச்சியின் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க கருப்பு நாய்க்கு உணவளிக்க வேண்டும்.
செவ்வாய் பகவானால் திடீரென்று லாபத்தை பெற கூடிய ராசிகள்
சிம்மம்:

சிம்ம ராசியில் 7-வது வீட்டில் ராகு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி உங்க இருவருக்கும் இருக்கும் பிரச்சனையில் மூன்றாம் நபர்களை தலையிடாமல் வைத்து கொள்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் நேர்மையாக இருங்கள். அப்போது தான் பாதி பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ராகுவின் பிரச்சனையில் இருந்து தப்பிக்க சனிக்கிழமையில் எள் தானம் வழங்க வேண்டும்.
கடகம்:

ராகு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் 8-வது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சியினால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் முதலீடு செய்தால் அவைபெரிய இழப்பிற்கு வழிவகுக்கும். திருமணமானவர்களுக்கு மாமியார் மற்றும் மாமனாருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்களுக்கு பணம் கையிலே இருக்காது. ராகுவால் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்காமல் இருப்பதற்கு சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் செய்ய வேண்டும்.
ரிஷபம்:
ராகு பெயர்ச்சி ஆனது ரிஷப ராசியில் 10-வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். உங்களின் வேலையில் வளர்ச்சியை காண்பதற்கு தவறான வழிகளில் முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்கள். இதனால் நீங்கள் பிரச்சனைகளை அதிகமாக சந்திக்க நேரிடும். அலுவலங்களில் உங்களின் பணியை மற்றவரிடம் கொடுத்து செய்ய சொல்லாதீர்கள். இதனால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏதேனும் குடும்ப சுப நிகழ்ச்சிகள் வந்தால் பங்கு கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்க அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்றால் அதனால் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். ராகு பகவானால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ராகு பகவானை வழிபடுங்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













