வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் பிரச்சனையால் அவதிப்பட போகும் ராசிக்காரர்கள்

Updated On: June 25, 2025 3:44 PM
Follow Us:
Zodiac signs that will face problems in life due to transit of Venus in tamil
---Advertisement---
Advertisement

சுக்கிரன் பெயர்ச்சி 2025

சுக்கிர பகவான் ஜூன் 26-ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகவுள்ளார். இந்த சுக்கிரனனின் பெயர்ச்சியானது எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை கூடுதலாகவும், குறைவாகவும் கொடுக்கும். அந்த வகையில் இந்த சுக்கிர நடச்சத்திர பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு பிரச்சனைகளை தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் கற்பனை திறன் உடையவராகவும் இருப்பார்கள். இந்த சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் நீங்கள் யாரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஏனென்றால் நீங்கள் பேசும்வார்த்தைகளை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். பணவரவு ஆனது குறைவாக காணப்படும். அதனால் நீங்கள் இந்த நேரத்தில் செலவுகளை சமாளிப்பதற்கு சிறியதாக கடன் வாங்குவீர்கள். புதிதாக எந்த செயலும் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியானது முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில் குழப்பங்கள் ஏற்படும். அப்படி உங்களுக்கு முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டால் பெரியவர்கள் அல்லது அனுபவமிக்கவர்களிடம் கேட்பது நல்லது. பணியிடத்தில் உள்ள பணிகளை முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அதன் மூலம் பிரச்சனை ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் பெரிய மாற்றத்தை சந்திப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு நிறைய சோதனைகள் ஏற்பட கூடும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி  படிப்பவராக இருந்தாலும்சரி வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு விட்டு கொடுத்து செல்ல வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் எந்த ஒரு முக்கிய முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும்.

கன்னி:

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களை பற்றி தவறான பிம்பம் வெளிவட்டாரத்தில் தெரியக்கூடும். இதனை நீங்கள் பெரிதுபடுத்தாமல் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நெஞ்செரிச்சல், வாயு, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். திடீரென்று செலவுகள் ஆனது அதிகமாக காணப்படும். இதனால மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகளில் மூன்றாவது நபர் சொல்வதை கேட்காதீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிப்பதற்கு விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now