குரு பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்.! உங்க ராசி இருக்கா!

Advertisement

குரு மிதுன பெயர்ச்சிக்கு அடைவதால் கிடைக்கும் பலன்கள்  

ஜோதிடத்தில் கிரகங்களின் ஒவ்வொரு கிரகமும் முக்கியமாக இருக்கிறது. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இது நேர்மறையானதும், எதிர்மறையானதும் இருக்கலாம். தற்போது குருபகவான் ஒரு வருடத்திற்க்கு பிறகு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியினால் சில ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்:

குரு மிதுன பெயர்ச்சிக்கு அடைவதால் கிடைக்கும் பலன்கள்  

 

குரு பெயர்ச்சி ஆனது மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் சாதகமான பலனை தர போகிறது. இந்த பெயர்ச்சியினால் நீங்க செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். உங்களின் பொருளாதார நிலை ஆனது இருந்ததை சற்று உயர்ந்து காணப்படுவீர்கள். பணியிடம் மாற்றம் ஏற்படும். இவை உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். பணியில் முன்னடி இருந்த அளவுக்கு வேலைகள் இருக்காது. இதனால் உங்களுக்கு மன அழுத்தம் இருக்காது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் லாபம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பார்ட்னர்சிப் மூலம் தொழில் செய்ய கூடியவர்களாக இருந்தால் உங்களுக்குப் டபுள் மடங்கு லாபம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு இந்த காலக்கட்டம் மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்க இருவருக்கும் இருந்த பிரச்சனை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஆனது நீங்க செய்ய கூடிய எல்லா செயல்களுக்கும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். நீங்க இந்த நேரத்தில் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்குவீர்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களின் உங்களின் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். மேலும் கோவிலுக்கு சென்று வருவீர்கள். பணவரவு அதிகரிக்க கூடும். இதனை பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். திருமண ஆனவர்களுக்கு வாழ்க்கை ஆனது மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடம் வரை அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிகள்.!

ரிஷபம்:

குரு மிதுன பெயர்ச்சிக்கு அடைவதால் கிடைக்கும் பலன்கள்  

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி எல்லா விஷயத்திலும் சாதகமான பலனை கொடுக்க கூடும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களால் பணியிடம் வளர்ச்சி அடைய கூடிய வகையில் இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு அனைத்து விதத்திலும் லாபம் தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த காலகட்டம் ரொம்ப உகந்ததாக இருக்கும். நீங்கள் சேமித்து வைக்க கூடிய பணத்திலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement