மே மாதம் முழுவதும் பணமழை தான்..! அதிர்ஷ்டத்தில் சிக்கிய ராசி நீங்களா..?

Advertisement

Zodiac Signs That Will Get Lucky Due To Transit Of Guru in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக விளங்கக்கூடியவர் தான் குரு பகவான். இப்படி சிறந்து விளங்கும் குருபகவான் மேஷ ராசியில் தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து குரு பகவான் மே 1 ஆம் தேதியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். ஆகவே குருவின் இந்த மாற்றத்தால் 12 ராசிகளில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தாண்டவம் ஆடப்போகிறது. அப்படி அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

குரு பெயர்ச்சியால் மே 1 -ல் இருந்து இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..! அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது..

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும் ராசிக்காரர்கள்: 

இந்த 2024 ஆம் ஆண்டில் குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நடக்கப்போகிறது. அதாவது இந்த மே மாதம் வரை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அனைத்துமே முன்னேற்றமாக தான் இருக்கும். அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று இப்போ காணலாம்.

மிதுன ராசி:

மிதுன ராசி

மே மாதம் முதல் குரு பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் தான் இடம் பெயர்கிறார். ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் மே மாதத்தில் உங்களுக்கு பல முன்னேற்றமான பலன்கள் கிடைக்க போகிறது. அதிக பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எனவே நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் செய்யும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

இந்த மே மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். இப்படி குரு பகவானின் இந்த மாற்றத்தால், உங்களுக்கு அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இந்த மே மாதத்தில் உங்களுக்கு பண வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். பணவரவு அதிகமாக இருந்தாலும், செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாம் ராசி:

துலாம் ராசி

இந்த மே மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து 8 ஆம் வீட்டில் தான் இடம் பெயர்கிறார். இந்த மாற்றத்தால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. இதுவரை இருந்து வந்த சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். இந்த நேரத்தில் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.  அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இனி எல்லாமே நல்ல காலம் தான்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி குரு திசை பலன்கள்

மே மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு தான் வருகிறார். குரு பகவானின் இந்த வருகையால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரப்போகிறது. பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

என்னது இந்த ராசிக்காரர்கள் துரோகம் செய்வார்களா.. அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement