Zodiac Signs To Get Lucky in Tamil New Year in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக தமிழ் புத்தாண்டால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறும்போது மற்ற ராசிகளில் அதன் தாக்கம் ஏற்படுகிறது. இப்படி தாக்கம் ஏற்படுவதால், நன்மைகளும் தீமைகளும் உண்டாகின்றன. அப்படி தற்போது தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கப்போகின்றது. அதுபோல ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் தலைவனாக விளங்கப்படும் சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக பிறக்கின்றது. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம் வாங்க..!
தமிழ் புத்தாண்டு 2024 தேதி மற்றும் நேரம்..
கடக ராசி:
இந்த தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விடும். தம்பதிகளுக்கிடையே அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும் பொன்னான நேரம் இது.
மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்யப்போகிறது. வேலைத் தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். இதுவரை தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அற்புதமான நேரம் இது.
சிம்ம ராசி:
தமிழ் புத்தாண்டால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகமாக காணப்படும். நீங்கள் தொடங்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தான். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். எதிரிகளால் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் பல முன்னேற்றங்களை காணப்போகின்றார்கள். வாழ்க்கையில் பெரிய பெரிய முன்னேற்றத்தை காணப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். இருந்தாலும் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |