சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ஆபத்து..! அதனால் கொஞ்சம் எச்சச்சரிக்கையாக இருப்பது நல்லது..!

Advertisement

சனியின் நட்சத்திர பெயர்ச்சி

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம்மில் பலருக்கும் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும் அல்லவா..! இன்னும் சொல்லப்போனால் என்ன தான் இன்றைய காலகட்டம் தொழில்நுட்பமாக மாறி இருந்தாலும் இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கும்.

ஜோதிட சாஸ்திர படி கிரகங்கள் எப்பொழுதும் ஓரே ராசியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றன. அதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அதுபோல சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். அந்த வகையில் மார்ச் 15 ஆம் தேதி சனிபகவான் சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைந்தார். அதனால் அக்டோபர் 17 ஆம் தேதி வரை இந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சரி வாங்க நண்பர்களே அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மீனம் ராசி: 

மீனம் ராசி

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பந்தபட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

சனி பகவான் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்ததால் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திலும் கவன செலுத்துவது நல்லது.

இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். அதனால் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்ப ராசி:

கும்ப ராசி

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இதுல உங்க ராசி இருக்கா 

கடக ராசி:

கடக ராசி

சனிபகவான் சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதனால் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்திலும் ஏற்ற தாழ்வுகள் காணப்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை தான்.. நீங்கள் இந்த ராசியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement