வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜூன் 20 முதல் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்க போகுது..

Updated On: June 18, 2025 12:30 PM
Follow Us:
Zodiac signs to watch out for from June 20
---Advertisement---
Advertisement

Zodiac Signs To Watch Out For From June 20

ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் ராசியை மாற்றி கொண்டே இருக்கும். அப்படி மற்றும் கொள்ளும் போது அதற்கான பலன்கள் ஆனது 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தரும். அந்த வகையில் ஜூன் 20-ம் தேதி சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இரண்டு கிரகங்களும் 150 டிகிரி கோணத்தில் இருந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்க போகிறார்கள். இதனால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் ஆனது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருக்க நேரிடும். வாழ்க்கை துணையிடம் நல்லுறவை பராமரிக்க முடியாது. பணியிடத்தில் வேலை ஆனது அதிகமாக இருக்கும். இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள். இதனால் சோர்வடைவீர்கள். மேலும் மன அழுத்தமும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கும் கடனாக பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

40-வயதுக்குள் கோடீஸ்வரர் ஆகுபவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தான்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் ஆனது பல விஷயங்களில் சவாலை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் இருக்க கூடும். இதனை சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படக்கூடும். தலைவலி, உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலை செய்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பணியிடமானது மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். மேலும் சக பணியாளர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய கூடிய எல்லா செயல்களிலும் கவனமும், பொறுமையும் அவசியம்.

கடகம்:

ஷடாஷ்டக யோகம் ஆனது கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை அல்லது தொற்று பிரச்சனை ஏற்பட கூடும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் கல்வியில் சிறந்து விளங்க மாட்டார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் இந்த கால கட்டத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணியில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களை சுற்று இருப்பவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். எந்த செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now