வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மாற போகுது

Updated On: May 10, 2025 1:58 PM
Follow Us:
Zodiac signs whose wealth level may increase due to Mercury transit
---Advertisement---
Advertisement

Zodiac Signs Whose Wealth Level May Increase Due to Mercury Transit | புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி

ஜோதிடத்தில் பொதுவாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட நாளுக்கு பெயர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். ஈபிடிபி பெயர்ச்சி அடையும் போது 12 ராசிகளிலும் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தரும். அந்த வகையில் மே 23-ம் தேதி புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு செல்வ நிலை உயர் போகிறது எவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

கும்பம்:

புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி 

புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பலன்களை அதிகமாக அனுபவிக்க போகிறார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை இந்த நேரத்தில் முடிந்து விடும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும். இதனை முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேரத்தை செலவிடுவீர்கள். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை அள்ளி தர போகிறது. இவர்களுடைய கடின உழைப்பு ஒருபுறம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் கூடவே இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகமாக காணப்படும். இதன் மூலம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்தால் புதன் பெயர்ச்சியால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட போகிறீர்கள். திருமண வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் துணையிடம் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கஜகேசரி யோகத்தால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்ட போகுது

கடகம்:

புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி 

புதன் பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு எல்லா செயல்களிலும் சாதகமான பலனை அள்ளி தர போகிறது. வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். இனிமேல் இந்த வேலை நடக்காது என்றிருந்த வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும். இதனை வைத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் இந்த நேரத்தில் வளர்ச்சியை அடைவீர்கள். இதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் இலக்குகளில் வெற்றியை அடைவீர்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பள உயர்வு கிடைக்கும். திருமண வரன் கிடைக்கவில்லை என்று வருத்தம் அடைந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண வரன் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now