அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

Patti Vaithiyam

அனைவருக்கும் பயனுள்ள கை வைத்தியம்:

அனைத்து உடல் பிரச்சனைகளையும் சரி செய்ய நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும், நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிட முடியும். சரி வாருங்கள் அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam) சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..!

தொண்டைப் பிரச்சனைகள் குணமாக:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும்.

இவ்வாறு குடிக்க பிடிக்காதவர்களுக்கு துளசி இலையை மட்டும் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.

சாப்பிட்ட பின்:

மருத்துவ குறிப்பு (Health Tips In Tamil): தினமும் சாப்பிட்ட பின் தண்ணீருடன் கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இவ்வாறு குடிக்கும் போது வயிற்றில் உள்ள அமிலங்கள் சுரப்பதை குறைக்க வழிவகுக்கும்.

உடல் எடை குறைய:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): கால் தேக்கரண்டி கரு மிளகு தூள், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3-4 மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடையை மிக எளிதில் குறைத்துவிட முடியும்.

முடி நன்கு வளர:

மருத்துவ குறிப்பு (Health Tips In Tamil): ஒரு கையளவு கருவேப்பிலை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். அடர்த்தியாக காணப்படும், முடி உதிர்வதை தடுத்து, முடி நன்கு வளர வழிவகுக்கிறது.

கடுமையான இருமல்:வீட்டு மருத்துவம்

உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): கடுமையான இருமல் பிரச்சனையில் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் மூன்று கப் தண்ணீரில் மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மூன்று வேளை குடித்து வந்தால் கடுமையான இருமல் குணமாகும். இந்த தண்ணீரை குழந்தைகளும் கூட குடிக்கலாம்.

பல் வலி குறைய:

மருத்துவ குறிப்பு (Health Tips In Tamil): பல் வலி உள்ளவர்கள் சிறிதளவு துளசி இலை, மிளகு, கொஞ்சம் உப்பு இவற்றை அனைத்தையும் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் பல் வலி குணமாகும்.

முக தழும்புகள் மறைய:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): குளிக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை போட்டு குளித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

அதே போல் தூங்கும் போது முகத்தில் கொஞ்சம் துளசி சாறு தேய்த்து வந்தாலும் முகத்தில் உள்ள அனைத்து சரும பிரச்சனைகளும் மறையும்.

குழந்தைகள் உடல் வலிமை பெற:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): கேரட் மற்றும் தக்காளி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தை சுறுசுறுப்பாகவும் மிக வலிமையாகவும் இருப்பார்கள்.

வயிற்றுப் போக்குக்கு உடனடி மருந்து:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): வயிற்றுப் போக்கு உடனே குணமாக ஒரு எளிய மருந்தாக விளங்குகிறது கொய்யாய் இலை. இந்த இலையை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு குறையும்.

பாட்டி வைத்தியம் (இயற்கை மூலிகை):

கற்பூரவல்லி (ஓமவல்லி):

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால், மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி:

மருத்துவ குறிப்பு (Health Tips In Tamil): காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றுக்கு சிறந்தது. காயங்கள், புண்களுக்கு இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம்.

துளசி:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): சளி, இருமல் தொல்லை நீங்க, துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.

தூதுவளை:

மருத்துவ குறிப்பு (Health Tips In Tamil): மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் சிறந்த டானிக் இது.

கீழாநெல்லி:

பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam): ரத்தச் சோகையைக் குறைக்கும். பசியை உண்டாக்கும். வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து, காலையில் குடித்து வர குணமாகும்.

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.