அரியவகை பழங்களும் அதில் இருக்கும் பயன்களும் | Fruit Benefits In Tamil..!

Advertisement

Fruit Benefits In Tamil

இப்போதெல்லாம் சந்தைகளில் அதிகமாகவே அரிய வகை பழங்கள் (fruit benefits in tamil) நமக்கு கிடைக்கிறது. அவற்றை நாம் தினமும் உட்கொண்டு வந்தால் நமக்கு அதிகமாகவே அதன் மருத்துவ பலன்கள் கிடைக்கும்.

உள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..?

அவ்வாறு கிடைக்கும் அரிய வகை பழங்களை பற்றி நாம் இங்கு காண்போம் மற்றும் அவற்றால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்களையும் நாம் இங்கு காண்போம்.

இலந்தை பழம் பயன் (Ber Fruit Benefits):

இலந்தை பழம் (Ber Fruit Benefits) இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடையது மற்றும் இலந்தை பழம் அதனுடைய விதைதான் பாதி இடத்தை அடைத்திருக்கும். இலந்தை பழம் (Ber Fruit Benefits) அதிகமாக கிராமப்புரங்கள் மற்றும் கரிசல்காடுகளில் தான் அதிகமாக விளைந்திருக்கும்.

இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும், பித்தம் குணமாகும் மற்றும் அடிக்கடி வரும் வாந்தி பிரச்சனைகள் குணமாகும்.

களாப்பழம்:

இந்த பழம் (Fruit Benefits In Tamil) வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும். இந்த பழம் காயாக இருக்கும் போது இந்த பழத்தை ஊருகாய் போட பயன்படுத்துவார்கள்.

களாப்பழம் காயாக இருக்கும் போது மிகவும் புளிப்பாக இருக்கும், இந்த பழம் பழுத்த பிறகு மிகவும் இனிப்பு சுவையாக இருக்கும்.

இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உணவு எளிதில் ஜுரணமாகி நமக்கு பசி தன்மையை அதிகரிக்கும் மற்றும் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் தொண்டை வலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

உடல் சூட்டினால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது களாப்பழம்.

வேப்பம்பழம்:

பொதுவாக இந்த பழத்தை (Fruit Benefits In Tamil) அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை, இந்த பழம் நன்றாக முற்றி மரத்தில் இருந்து தானாக கிழே விழும் பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும்.

இந்த பழத்தை நாம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த ஒரு நோயும் அண்டாது மற்றும் இது பித்தத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. இவற்றை அதிகமாக நாம் உட்கொண்டால் சொரி, சிரங்கு, தோல் நோய்கள் ஆகியவை குணமாகும்.

எந்த நோய்க்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று தெரியுமா..?

டிராகன் பழம்:

இந்த பழம் (Fruit Benefits In Tamil) விந்தைய தோற்றத்தில் இருக்கும். இந்த பழம் மிகவும் இனிப்பு சுவையாக இருக்கும். டிராகன் பழத்தை அதிகமாக சாப்பிட்டால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

ரம்புட்டான் பழம்:

இந்த பழத்தில் புற்று நோயை எதிர்க்கும் உட்பொருள் உள்ளது. இதை அதிகமாக நாம் சாப்பிட்டால் நம் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடும் சக்தி இவற்றில் அதிகமாக உள்ளது.

கிவி:

இந்த பழம் (Fruit Benefits In Tamil) மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

கிவி பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பயன்படுகிறது.

ஆலிவ்:

பல நிறங்களில் இருக்கும் ஆலிவ் பழங்கள் (Fruit Benefits In Tamil) அவற்றில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் தான் மிகவும் சிறந்தது.

இந்த நிறமுள்ள ஆலிவ் பழங்களை நாம் அதிகமாக சாப்பிட்டால் எலும்பு வளம் பெரும் மற்றும் புற்று நோய் தடுக்கப்படும்.

பேசன் பழம்:

இந்த பழத்தில் (Fruit Benefits In Tamil) அதிகமாக நார்ச்சத்து உள்ளது மற்றும் இந்த பழம் மிகவும் மென்மையாக இருக்கும்.

இந்த பழம் அதிகமாக நாம் உட்கொண்டால் புற்று நோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

மங்குஸ்தான் பழம்:

ஸ்ட்ராபெரி சுவை போல் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் மிக சிறந்த மருத்துவம் குணம் கொண்டது.

இந்த பழம் (Fruit Benefits In Tamil) குறிப்பாக வயிற்று போக்கை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

ஆல்பக்கோடா பழம்:

ஆல்பக்கோடா பழம் (Fruit Benefits In Tamil) தமிழ் நாட்டில் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். இவற்றில் அதிகமாக சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி சத்துகள் நிறைந்து உள்ளது.

இந்த பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் அதிகத் இரத்தத்தை விருத்தி செய்கிறது மற்றும் ஆல்பக்கோடா பழம் காய்ச்சல் உள்ள போது நாம் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும், வாய்க்கசப்பைப் போக்கும்.

நாவறட்சி மற்றும் வாந்தியை தடுக்கும் தன்மை வாய்ந்தது. தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

சொரி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சொரி, சிரங்கு குணமாகும்.

நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான மருத்துவ குறிப்பு..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement